என்னப்பா கவிதை சுட்டுருச்சா

அவள்: டேய்..ஒரு கவிதை சொல்லுடா...
அவன்: அப்படியா...ம்...சுட்ட கவிதை வேணுமா? சுடாத கவிதை வேணுமா?
அவள்: ம்..சுடாத கவிதையே சொல்லு...
அவன்: சரி..சொல்றேன்...
       
‘உனக்கு நினைவிருக்கின்றதா?
        அன்றொரு நாள் 
        அடித்த அடைமழையில்
        ஒற்றைக் குடையின் கீழ்
        நாம்
        வெப்பம் தின்றோம்.
        மழை விட்டது.
        மனம் வரவில்லை
        குடையை விட.
        நான் சுதாரிக்கிறேன்..
        நீ சுற்றிப்பார்க்கிறாய்..
        விலக எத்தனிக்கிறேன்..
        என்
        விரல்களைப் பற்றுகிறாய்..
        அடிவயிற்றில் பிறந்தன 
        பட்டாம்பூச்சிகள் சில.
நீ ஒரு 
    முடிவுக்கு வருகிறாய்..
        முன்னால் வருகிறாய்..      
        முந்துகிறாய்..
        பிந்துகிறேன்..
        முகத்தில் முகம் வார்க்கிறாய்..
        வியர்க்கிறேன்..
        இதழா.. .. ... '

அவள்: (வேகமாய்) டேடேய்...ஷ்ஷ்ஷ்...ஷ்ஷ்ஷ்....
அவன்: என்னப்பா.. கவிதை சுட்டுருச்சா?  

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (19-Oct-18, 1:52 am)
பார்வை : 263

மேலே