பக்தகோடி எறும்புகள் அரோகரா சொல்வதில்லை

அவள்
வெட்டிப்போட்ட
பிறைநகங்களைக்
காவடியாய்த்
தூக்கிக்கொண்டு
மலையேறும்
பக்தகோடி எறும்புகள்
'அரோகரா' சொல்வதில்லை.
'அவ என் அஞ்சல மச்சான்'
என்றே சொல்கின்றன!

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (19-Oct-18, 1:32 am)
பார்வை : 77

மேலே