திருப்புவனமும், பொன்னனையாளும்

மாதொரு பாகனோடு முகம் காட்டும்
அன்னையவள் பார்வதி தவம் காக்க நின்ற தலம்.
ரசவாத திருவிளையாடல் காட்டி,
பொன்மேனி உற்சவரை மதுரை ஈசனே வைத்த இடம்.
சமணரோடு வாதம்புரிய மதுரைக்வகு வர சம்பந்தர்
மனம் நிறைக்க கால் பதித்த புண்ணிய பூமி.

நாளும், பொழுதும், ஈசனையே நினைத்து
தாழும் மனத்தில் தாரமெனவே வடித்து,
ஆளும் அரங்கில் அவன் பாதம் பணிந்து,
நீளும் கனவில் புவனத்து நாதனைச் சேர நினைத்தவள்,
பூவனத்து நாதனுக்கே நானென வாழ்ந்தவள் பொன்னனையாள்.

பொன்னெல்லாம் பெற்று ,
புவனம் காத்தவன் வடிவம் படைக்கவே,
அந்தமில்லா வாழ்வில் சத்தியம் காத்தவள்,
நித்தம் அவனை மனதில் நிறைத்தவள்,
பொன்னனையாள் வாழ்ந்த பேரூர்.

பொன்னனையாள் தாசி அல்ல,
பொன்னனையாள் எனும் வாழும் தெய்வம்.

எழுதியவர் : arsm1952 (20-Oct-18, 9:22 am)
சேர்த்தது : arsm1952
பார்வை : 94

மேலே