மந்திரப்பெண்ணே
மஞ்சள் பூசிய
மந்திரப்பெண்ணே
உன் நாணம் கண்டு
நான் என்னை மறந்தேனே...
நீ ஒவ்வொரு முறை
சிரிக்கும் போதும்
உனக்காய் உயிர்த்தெழும்
எந்தன் உயிர்....
உன் ஒற்றை முடி ஆடும்
அழகினைக் கண்டு
ஆனந்தம் கொண்டேனே....
பெண்ணே...
நான் ஏன் உன்
கரங்களாக இருக்க்கூடாது...
காற்றில் ஆடும் அழகிய முடிதனை
அன்பாய் கோதிவிட...
ஹய்யோ... போதும்.. போதும்...
ஒன்று உன்னை கொடுத்துவிடு...
இல்லையேல் என்னை கொன்றுவிடு...

