மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மணிகண்டன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 26-Feb-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 241 |
புள்ளி | : 29 |
தொலை தூரத்தில் விண்மின்...
தொடநினைக்கும்
குழந்தையாய் நான்...
எட்டுதிக்கும் எம்மனசு
உன்ன எண்ணி தவிச்சி நிக்க
கண்ணடிச்சி சாய்ச்சவளே
கைபிடிக்க காத்துருக்கே...
உதட்டோர சிரிப்பால
உசிரெடுத்து போறவளே...
உன் கால்கொலுசு சத்தம் கேட்டு
இதயமிங்கு துடிதுடிக்க .....
எட்டுவச்சி நீ நடக்க
எட்டி நின்னு நான்ரசிக்க
மனசெல்லாம் உன் நினப்பு
மலைபோல குவிஞ்சுருக்க...
உன் வளவிச் சங்கீதம்
உசுருக்குள் நாணேற்ற
நரம்பெல்லாம் உன்நினைவாய்
நாட்டியங்கள் தான்-இயற்ற..
எழுதி வைத்த கடிதங்கள்
கடல் போல திரண்டு நிற்க
எப்போது கொடுப்பாயென
முறைத்தே எனை பார்க்க....
தேவதையா உன்னுருவம்
மனசுக்குள் பதிச்சிவச்சி
நித்தம் நித்தம் நான் வடிச்ச
கவிதைகளோ ஏராளம்....
கொஞ்சு
உன்னை சந்திக்கும் வேளையில்
தொலைதூர விண்மீனை
தொடநினைக்கும் குழந்தையானேன்..
இதென்ன அதிசயம்
இதயத்துடிப்பு இருமடங்காகிறது..
உன் விழிஈர்ப்புவிசையின் முன்
புவிஈர்ப்பு விசையெல்லாம்
பொய்யாய் போனதென்ன விதி?
மேகம் தாண்டி பறக்கும்
பறவையைப் போல...
திசைகளறியாது பறக்கிறது என் மனம்..
இப்போது என்செய்வேன்...
நிலவொளியில் தேவதையாய்
நீ நடந்து வந்த காட்சி எல்லாம்
இருகண் கொண்டு பார்த்த தென்றோ
இறைவன் தந்த வரம் எனக்கு...
நீ கண்ணிமைக்கும் நேரம்
காற்றும் திசைமாறுகிறது..
என் இதயம் மட்டும்
விதிவிலக்கா என்ன?
உன்னை நான் சந்தித்த வேளையில்
அது உன்னிடமே சரணடைந்தது.....
என் மூளையில் சேகரித்த
நினைவலைகளின் எண்ணிக்கையில்
அதிகம் உச்சரித்தது
உனது பெயர்தான்.....
மழையை வரவேற்க்க
பூமி கொடுத்தனுப்பிய
பூங்கொத்து மரங்கள்...
வேரின் வழி பூமிக்குள் நுழையும்
புதிய உறவு மரங்கள்...
பெய்யும் மழைத்துளியை
மண்ணுள் புதைத்து வைக்கும்
இரகசிய வழிப்பயணம் மரங்கள்...
கண்ணிற்கு தெரியாமல்
காற்றை சல்லடை செய்யும்
இயற்கையின் கருவி மரங்கள்...
பசுமை கொஞ்சும் இலைகள்
வானை நோக்கிய கிளைகள்
பட்டாக்கள் ஏதுமின்றி
பறவைகள் வாழ
இடம் தருபவை மரங்கள்..
மரங்கள்...
இயற்கையின் பேரதிசயம் ..
அதீத நிழல்தரும் அற்புதப்படைப்பு ....
கடவுள் கொடுத்தனுப்பிய கரங்கள்
பூமியை அழகாக்கும்
ஒற்றைகால் தேவதைகள்...
நீரின்றி அமையாதாம் உலகு ..
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..
மரங்கள் இன்ற