நீ மட்டும் போதும்

எட்டுதிக்கும் எம்மனசு
உன்ன எண்ணி தவிச்சி நிக்க
கண்ணடிச்சி சாய்ச்சவளே
கைபிடிக்க காத்துருக்கே...

உதட்டோர சிரிப்பால
உசிரெடுத்து போறவளே...
உன் கால்கொலுசு சத்தம் கேட்டு
இதயமிங்கு துடிதுடிக்க .....

எட்டுவச்சி நீ நடக்க
எட்டி நின்னு நான்ரசிக்க
மனசெல்லாம் உன் நினப்பு
மலைபோல குவிஞ்சுருக்க...

உன் வளவிச் சங்கீதம்
உசுருக்குள் நாணேற்ற
நரம்பெல்லாம் உன்நினைவாய்
நாட்டியங்கள் தான்-இயற்ற..

எழுதி வைத்த கடிதங்கள்
கடல் போல திரண்டு நிற்க
எப்போது கொடுப்பாயென
முறைத்தே எனை பார்க்க....

தேவதையா உன்னுருவம்
மனசுக்குள் பதிச்சிவச்சி
நித்தம் நித்தம் நான் வடிச்ச
கவிதைகளோ ஏராளம்....

கொஞ்சும் கிளியே
மிஞ்சும் உன்னழகில்
எஞ்சும் என்னுசுரு
உன்க்காக வாழுமடி...
உலகே அழிந்தாலும்
நீ மட்டும் போதுமடி....

அழகே என்னுயிரே
அற்புதக் கவிக்குயிலே...
மெதுவா தலைசாய்க்க
உன்மடிதான் வேணுமடி....
சொர்க்கமே தேவையில்லை
இதுமட்டும் போதுமடி...

சின்ன சின்ன சண்டையிட்டு
சினுங்கி நீ அழவேணும்
யாரு செஞ்ச தவேறோ - பல
தண்டனைகள் நான் பெறவேணும்...

வெண்ணிலவின் பிரதியெடுத்து
உன்னுருவம் தரவேணும்
வெட்கத்தினில் வெண்ணிலவோ
வேறுலகம் மாற வேணும்...

குட்டி குட்டி பரிசுப் பொருள்
எப்போதும் நான்கொடுக்க
புத்திகெட்டு போனவனோ
என்றென்னி நீ நினனக்க ...

சிறிதாய் எனனக்கிள்ளி
அழகாய் சிரிப்பாயே...

என்பது வயதாகும்
காதலுக்கு வயதேது...
அப்போதும் உனை நானோ
உயிருக்குள் ஏந்தி நிற்பேன்...

சுருங்கிய தோல்களிலே
மகிழ்ச்சிகள் நிறைந்திருக்கும்
தூக்கத்தில் என் உளறல்
உன்பெயரை சுமந்திருக்கும்...

எப்போதும் என்னாசை
என்னவென்று கேட்பாயே....

உன்னுலகம் அழகாக்கி
உனக்கே தரவேண்டும்....
அவ்வுலகில் நானிருந்து
உன் அன்பை பெறவேண்டும்..

என் இறுதிமூச்சு வரை
உன்னுடனே வாழவேணும்...
உன் நெற்றிப்பொட்டு அதில்
முத்தமிட்டு சாகவேணும்....

இது போதும் எனக்கிங்கு
வேறென்ன வரம் வேண்டும்...
நீங்காத உன் அன்பு
அது மட்டும்
போதும் போதும்....

-மணிகண்டன்

எழுதியவர் : மணிகண்டன் (14-Jan-19, 7:23 pm)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : nee mattum pothum
பார்வை : 949
மேலே