என் மொத்த காதலும் ஓர் முத்தத்தில் 555

என்னவளே...
தினம் தினம் உனக்காக
நான் காத்திருந்து...
உன்னருகில் நான்
வரும்போதெல்லாம்...
உன் இதழ்கள் பிரியாமல்
ஒரு
புன்னகையை கொடுப்பாய்...
காதலை சொல்ல
வரும்போதெல்லாம்...
உன் புன்னகையை கண்டு
திரும்பிவிடுவேன்...
ஆயிரமுறை உன்னிடம்
சொல்ல வந்த காதலை...
உன் இதழ்களை தழுவி
ஒரு
முத்தத்தில்
சொல்ல துடிக்குதடி மனசு...
முத்தமாக
உன் கன்னத்தில்...
என் மொத்த காதலையும்
சொல்லிவிட ஆசை...
உன் கன்னத்தில் காதலனாக
உன் இதழ்களில் கணவனாக...
முதலில் என்னை உன்
காதலனாக ஏற்றுக்கொள்...
உன் இதழ்களை
பிரித்து
சொல்லிவிடு...
உன் காதலை
என்னிடம்.....