மரங்கள்

மழையை வரவேற்க்க
பூமி கொடுத்தனுப்பிய
பூங்கொத்து மரங்கள்...
வேரின் வழி பூமிக்குள் நுழையும்
புதிய உறவு மரங்கள்...
பெய்யும் மழைத்துளியை
மண்ணுள் புதைத்து வைக்கும்
இரகசிய வழிப்பயணம் மரங்கள்...
கண்ணிற்கு தெரியாமல்
காற்றை சல்லடை செய்யும்
இயற்கையின் கருவி மரங்கள்...
பசுமை கொஞ்சும் இலைகள்
வானை நோக்கிய கிளைகள்
பட்டாக்கள் ஏதுமின்றி
பறவைகள் வாழ
இடம் தருபவை மரங்கள்..
மரங்கள்...
இயற்கையின் பேரதிசயம் ..
அதீத நிழல்தரும் அற்புதப்படைப்பு ....
கடவுள் கொடுத்தனுப்பிய கரங்கள்
பூமியை அழகாக்கும்
ஒற்றைகால் தேவதைகள்...
நீரின்றி அமையாதாம் உலகு ..
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..
மரங்கள் இன்றி வாழாது மானுடம்....

எழுதியவர் : மணிகண்டன் (25-Oct-18, 2:50 am)
சேர்த்தது : மணிகண்டன்
Tanglish : marangkal
பார்வை : 231

மேலே