உணவே மருந்து

வல்லாரை துவையல் உண்டிடு /
அதிலே ஞாபக சக்தியைக் கண்டிடு /
அறுகம்புல் சார் அருந்திடு /
அதிலும் ஞாபக சக்தி உள்ளதை அறிந்திடு /

தூதுவலையை மென்றிடு/
நெஞ்சுச் சளியை வென்றிடு /
துளசிச் சாரைக் குடித்திடு /
கூடவே கற்கண்டையும் சேர்த்திடு/
லொக்கு லொக்கு இருமலைக் குறைத்திடு /
அதனுடன் தொண்டைக் கர கரப்பை விலக்கிடு /

முடக்கத்தான் கசாயம் சுவைத்திடு /
மூட்டு வலிக்கு முற்றுப் புள்ளியிடு /
அகத்திக் கீரை பிரட்டிடு /
அதிலே வயிற்றுப் பூச்சைக் கொன்றிடு /
முருங்கைக் கீரை அரைத்தெடு /
மூச்சு அடைக்கச் செய்யும்
ஆஸ்துமாவைத் துரத்திடு /

கிளிசறியைக் கசக்கி எடு /
முகப்பருக்களுக்கு முடிவு கட்டிடு /
கரும் சீரகம் வறுத்தெடு /
கட்டுக்கடாங்காத இனிப்பு
நோயைக் கட்டிடு /

பச்சை மஞ்சள் கிழங்கு சாப்பிடு /
இதயமதைக் காத்திடு /
வெள்ளை எள்ளு தின்றிடு /
இளைத்த உடலை மீட்டிடு /
கொள்ளைக் கொஞ்சம் சேர்த்திடு /
கொழுப்பைக் கொஞ்சம் கரைத்திடு /

காரத்தைக் கணக்காயெடு /
கோபத்தைக் குறைத்திடு /
குழம்புக் கறியை குறைத்திடு /
வயிற்றுப் புண்ணின் வரவைத் தடுத்திடு /
எண்ணெய் துளிகளாய் இடு /
கூடி வரும் வியாதியை களைத்திடு /

சின்ன வெங்காயத்தை அதிகம் அள்ளிடு /
நுரையீரலைக் கிள்ளும் வியாதியை தள்ளிடு /
வேம்பு குச்சு கொண்டு பல்லைத் துலக்கிடு /
சங்குப் பல்லைக் பாதுகாத்திடு /
செம்பருத்தி இலையை
முடிக்குப் போட்டுக் குளித்திடு /
கருமையோடு நீள் கூந்தலைப் பெற்றிடு /

பூண்டு வறுத்து உண்டிடு /
வயிற்றுப் உப்பளை விரட்டிடு /
வெந்தையத்தை அதிகம் சேர்த்திடு /
அதிலே உடல் சூட்டைத் தனித்திடு /
உப்பைக் குறைத்திடு /
இதய அடைப்பை நிறுத்திடு /

கடல் மீன்களை சுவைத்திடு /
கண் பார்வையை காத்திடு/
பச்சைக் கீரை உணவோடு சேர்த்திடு /
இரத்தத்தை அதிகரிக்கச் செய்திடு /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (25-Oct-18, 7:05 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 89

மேலே