காத்திருந்தேன்

எங்கிருந்தோ இடியிடிக்க
ஆங்காங்கே மின்னல் வெட்ட
மழைபொழிந்து மண்மணக்க,
மங்கை உடல்நனைக்குமென்ன;
“கருக்கட்டிய மேகங்களினின்றும்
உருக்கொண்டு ஓர்துளியவிழாதோ?”
எண்ணுதற்குள் என்மழைக்கனவு
வீசிய காற்றதனால்
வீணேகலைந்து போய்
வானிலையறிக்கை போல
வீணிலே பொய்த்துவிட;
இலதொன்றை வானமென்று
ஏமாந்து பார்த்தாற்போல்
இல்லாத காதலதை
எல்லையிலாதெங்கும் பரந்ததென்று பார்த்திருந்தேன்...! காலத்தால்
கனியுமென்று காத்திருந்தேன்..!
~ தமிழ்க்கிழவி (2018 )

குறிப்பு: தரப்பட்ட, மேற்குறித்த தலைப்பிற்கமைய எழுதப்பட்ட இக்கவிதை, இவ்வாரம் தினமணியின் கவிதைமணியில் வெளிவந்துள்ளது:)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (21-Oct-18, 3:11 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 1945

மேலே