அன்பு

உன் கண்ணாய் நானிருக்க
என்னை காட்சியாக்க நீ துடிக்க...

உன் உயிராய் நான் இருக்க
உருவமாக்க நீ தவிக்க...

உன் நினைவாய் நானிருக்க
என்னை கனவாக்க நீ துடிக்க

உன் பாதமாக நானிருக்க
சுவடுகள் அறியாமல் என்னை நீ துரத்த

உன் உதடாக நானிருக்க
என்னை கவிதைகளாய் நீ செதுக்க

உன் கைகளாய் நானிருக்க
என்னை கரம்பிடிக்க நீ துடிக்க

உன் இதயமாய் நான் துடிக்க,,,நான்
உயிரோடு இருக்க நீ துதிக்க

அன்புத் தோழி!!!

நீ என்னைத்தேடுவதை விட்டுவிடு ...உனக்குள்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. ..

மகிழ்ச்சி எனும் பூந்தோட்டத்தில் மலராக நீ மலர்ந்தால் ,காதல் எனும் கானகத்தில் வானை முட்டும் மரங்களாக நான் வளர்வேன்....

மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நீ மகிழ்வோடு இரு .............. அதுதான் என் பலம்....
அதில் தான் நான் வாழ்கிறேன்....


உன் வேரில் தான் என்செடி உள்ளது என் அன்புத்தோழி....

எழுதியவர் : செல்லப்பாண்டி செ (22-Oct-18, 8:04 pm)
சேர்த்தது : செல்லப்பாண்டி செ
பார்வை : 856

மேலே