சிலநேரம்

சிலநேரம்
ஆனந்தமழையாய்
சிலநேரம்
அமிலமழையாய்...

சிலநேரம்
குளிர்காயும் தீயாய்
சிலநேரம்
குடிசையை எரிக்கும் தீயாய்...

சிலநேரம்
மழலையின் புன்னகையாய்
சிலநேரம்
மரணத்தின் கண்ணீராய்...

சிலநேரம்
மௌனத்தின் அமைதியாய்
சிலநேரம்
மழைநாளின் பேரிடியாய்...

எப்படி வரையறுக்க
உன் நினைவுகளை ???

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (22-Oct-18, 6:38 pm)
சேர்த்தது : sowmyasuresh
Tanglish : silaneram
பார்வை : 241

மேலே