மெளன ஆட்டம்

சூடுகண்ட பூனையதாய்
அடுக்களை நாடாதிருக்க
நாடிவந்து நயம் காட்டி,
வாடி நிற்க; மெளனித்தாய்...

விட்டுச் சென்று நானுமுன்னை, கை
தட்டிச்சிரித்து இரசிப்பேனென்றோ
எட்டநிறுத்தியெனை எள்ளிநகையாடுகிறாய்?

ஏற்றாலும் மறுத்தாலும்
மாற்றமுறா திம்மனதினிமேல்;
கூற்றுவனுக்காகும் வரை
கொற்றவன் நீயேயிங்கு!
மாற்றமதில் இல்லை ஐயே!!

ஈசனவன் எந்தனது
இன்னுயி ரெடுக்குநாள்
ஏததுவோ அந்நாள் இவ்
ஏழையுனைப் பிரியும் நாள்
இறைமீ தாணை!

போதுமிந்த மெளன ஆட்டம்
பேசிவிடு என்னிடம் நீ!
~ தமிழ்க்கிழவி (2018 )

எழுதியவர் : தமிழ்க்கிழவி (22-Oct-18, 6:28 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 588

மேலே