குளைக்காட்டுக் குஞ்சன்
ஊரெலு ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட தங்கம்மாவும், பொன்னம்மாவும் இரு சகோதரிகள், அதில் தங்கம்மா மூத்தவள். அவர்கள் இருவரதும் பெற்றோர் செல்லத்தம்பியும், செல்லம்மாவும் உலகில் இருந்து விடை பெறமுன் இரு மகள் மாருக்கும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க ஆளுக்கு பக்கத்து பக்கத்தில் 200 அடிகள் நீளமும்100 அடிகள்அகலமும் , சுமார் 21 குழிகள் உள்ள சுன்னாகம் - புத்தூர் பாதையில் ஒரே மாதிரியான காணியில் இரு வீடுகளைக் கட்டிக் கொடுத்து, இருவர் பேரிலும் ஊயில் எழுதி வைத்துப் போனார்கள் . அதோடு இருவருக்கும் ஒரு பொதுக் கிணறு. நீண்ட தென்னம் கிடுகு வேலி இரு காணிகளையும் பிரிக்கிறது. பங்கு கிணறு, வேலி பற்றிய சொத்து விபரம் அவர்களுக்கு இடையே சண்டை வராமால் இருக்க உயிலில் எழுதி இருந்தது. அந்த விபரத்தில் தென்னோலை கிடுகு போட்ட 200 அடிகள் நீளம் உள்ள பொது வேலி இருவருக்கும் சொந்தம்
வேலியை இருவரும் முறை எடுத்து சில வருடங்களுக்கு ஒரு தடவை புது கதியால்கள் போட்டு, தென்னம் கிடுகால் அடைக்க வேண்டும். அந்தவேலை நடக்கும் பொது தங்கம்மாவும், பொன்னம்மாவும் பிரசன்னமாகி இருப்பார்கள் , காரணம் கதியால்கள் போடும் போது ஒருவர் காணியை ஒருவர் சில அங்குலம் ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு . அவ் நீண்ட வேலியில் உள்ள பூவரசு, கிளுவை . முள் முருக்கை ஆகியவை வேலிக் கதியால் மரங்களில் அந்த சிவந்த மணணில் செழிப்பாக வளரும் . அம் மரங்களில் உள்ள இலை குளைகள் வெட்டுபவன் அவர்களின் தூரத்துச் சொந்தக்காரனான சரசாலையைச் சேர்ந்த குஞ்சன் என்ற குஞ்சிதபாதம். இலைகளை விற்று வரும் பணம் இரு சகோதரிகளையும் சரி பாதியாகப் போய் சேரும். வேலியை இரு வருடத்துக்கு ஒரு தடவை முறை எடுத்து மாற்ற வேண்டும். அப்போது வெலியில் உள்ள பூவரசு, கிளுவை முள் முருக்கை மரங்களில் உள்ள இலைகளை வெட்டிக் கொண்டு போக யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில் சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சரசாலை என்றஊரில் இருந்து வருவான் ..
A9 வீதிக்கு வடக்கே சாவகச்சேரியில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள. இவ்வூருக்கு பருத்தித்துறை நோக்கிச் செல்லும் சரசாலை-நுணாவில் வீதி ஊடாக பயணம் செய்யலாம்.
இராம இராவண யுத்த காலத்தில் இந்தியாவிலிருந்து படையெடுத்து வந்திருந்த இராமபிரனானும் அவரது சேனைகளும் இவ் ஊரிலே போருக்காக அம்புகளை உற்பத்தி செய்யும் இடமாக இருந்தமையால் இது சரசு ஆலை என அழைக்கப்பட்டு பின்னர் சரசாலை என அழைக்கப்படுகின்றது. என்பர் தமது புனைவில் ஊர்வசிகள். அம்பு என்பதை சரசு எனவும் அழைக்கலாம்.
சரசாலையில் இருந்து குளைக்காட்டான் குஞ்சன் குளை வெட்ட ஊரெலுவுக்கு வருவான். வேலிகளுக்கு கிடுகு கொண்டு வந்த வண்டியில். குளைகளை ஏற்றிக் கொண்டுபோய் சாவகச்சேரி பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயம் செய்வோருக்கு உரமாக விற்பான். அதனால் அவனை சகோதரிகள் இருவரும் “குளைக்காட்டான் குஞ்சன்” என்ற அடைப்பெயர் வைத்து குஞ்சிதத்தை அழைத்தனர். பெயருக்கு ஏற்ப அவன் ஐந்தடி மூன்று அங்குலம் ஊயரம். அவனுக்கு உதவியாக அவனின் ஒரே மகன் சின்னன் .
கிடுகையும் கிரமங்களில் விளைந்த மரக்கறிகளையும் மா பலா போன்ற பழங்களையும் தன் இரு மாடுகள் பூட்டிய வண்டியில் ஏற்றி பதிநாலு மைல்கள் சாவகச்சேரியில் இருந்து பயணம் செய்து உரும்பிராய் ,. கோப்பாய். கோண்டாவில் ஆகிய கிராமங்களில் விற்று, மரக்கறிகளை யாழ்ப்பாணச் சந்தையிலும் விற்று அதே வண்டியில் வேலிக் கதியால்களில் உள்ள மரங்களில் இருந்து வெட்டிய குளைகளை ஏற்றிக் கொண்டு சாவக்கச்சேரி பகுதியில் உள்ள கிரமங்களில் விவசாயம் செய்வோருக்கு விற்பனை. செய்வான் . குஞ்சனிடம் குளைகள் வாங்கி, நிலத்துக்கு அடியில் புதைத்து விவசாயம் செய்தால் விளைச்சல் அதிகம் என்பது கிராமப் பகுதியில் வாழும் விவசாயிகளின் நம்பிக்கை, உரும்பிராய், கோண்டாவில். கொக்குவில், கோப்பாய், ஊரெழு ஆகிய கிராமங்களில் வேலி மரங்களைத் தெரிந்தெடுத்து, குளைகளை வெட்டுவதில் சரசாலைக் குஞ்சன் நிபுணன்.
குஞ்சன் ஊரில் இருந்து தென்னம் கிடுகளை வண்டியில் கொண்டு வந்து விற்று பின் வெலியில் உள்ள குளைகளை பேரம்பேசி வெட்டி கிடுகு கொண்ட வந்த வண்டியில் ஏற்றிக்கொண்டு சாவகச்சேரியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் மண்னுக்கு உரமாக எடுத்து எடுத்துச் சென்று குஞ்சன் விற்பான். அதனால் அவனுக்கு குளைக்காட்டு குஞ்சன் என்று பெயர் வந்தது . விவசாயிகள் அந்தக் குளைகளை நிலத்தில் புதைத்து, உரமாக்கி அதிக விளைச்சல் பெறுவர்கள்.
தங்கம்மாவுக்கும் பொன்னம்மாவுக்கும் சொந்தமான வேலியில் சடைத்து வளர்ந்த பூவரசு, முள் முருக்கை, கிளுவை மர இலைகளை வெட்டி போய் விற்பது குஞ்சனின் வழக்கம்.
”கிடுகு வேலிக் கலாசாரம்” என ஈழத்தின் வடபகுதித் தமிழர்களின் வாழ்வியலைக் குறிப்பாகச் சொல்லுவது பழக்கம், காரணம் அவர்கள் தம் வளவுகளுக்கு கிடுகுவேலியினால் நேர்த்தியாக; அச்சறுக்கையாக எல்லையினை வரையறுத்துக் கொள்ளுவதோடு ஒரு வித மூடிய கலாச்சாரமாக விளங்கும் அதன் பண்பையும் விளக்க இந்த சொற்பதம் படித்வர்கலாள் அதிகம் பாவிக்கப் படுகிறது.
தென்னங் கிடுகுகளால் மாத்திரமன்றி பனை ஓலை, பனை மட்டை, தகரம், சீமேந்து மதில்கள் என்பனவும் பரவலாகப் புழக்கத்தில் இருப்பவை. வேலிச் சண்டை குடும்பங்களிடையே அடிக்கடி நடக்கும். அச்சண்டை அனேகமாக வேலியின் கத்தியால்கள் மாற்றும் பொது காணி ஆக்கிரமிப்பு சண்டையாக உருவாகி வக்கீளில் போய் முடிவதுண்டு .
மசுக்குட்டி( மயிர் கொட்டி புழுக்கள் ) நிறைத்த வேலியில் உள்ள மர இலைகள், வேலிக்கு அருகே உள்ள பக்கத்து வீட்டு கிணற்றுக்குள் விழுந்தால் பின் வேலிச்சண்டை உருவாகப் பேசத் தேவயில்லை .
சில குடும்பங்கள் வேலியில் இருக்கும் ‘பொட்டு எனும் சிறிய திறப்பு. அவசர வழியாகப் பாவித்து போய் வருவதுண்டு. அவ்வழியாக உருவாகும் காதலுக்கு “பொட்டு வழிக் காதல்”
என்று சொல்வார்கள்” கோப்பி, சீனி, மிளகாய் தூள், அரிசி, முட்டை போன்ற பல சரக்கு பரிமாற்றமும் இரு குடும்பங்களுக்கு இடையில் பொட்டு வழியே நடப்பதும் உண்டு. ஒரு வீட்டு நாய் பக்கத்து வீட்டு வளவுக்குள் போய் மல சலம் கழித்து வருவதும் பொட்டு வழியே.
மசுக்குட்டிகள் இரண்டு வகைப் படும். ஒன்று வெள்ளை, மற்றது கருப்பு. நிறம். அதிலும் நிற வேற்றுமை உண்டு இவை முள் முருக்கை பூவரசம் மர இலைகளில் நிரம்ப இருக்கும் குஞ்சன் இலைகள் வெட்டும் போது கவனமாகப் இலைகளை பார்த்து வெட்டும் திறமை அவனுக்கு உண்டு.
அன்று தங்கம்மா வீட்டு பொது வெலியில் உள்ள மரங்களில், இலைகள் வெட்ட வந்த குஞ்சனுக்கு இலைகளைப் பார்த்தவுடன் அதை வெட்ட விருப்பமில்லை.
“என்னம்மா வேலியில் உள்ள மரங்களுக்கு மருந்து அடித்திருக்குது போல இருக்கு. இந்த இலைகளை வெட்டிக் கொண்டுபோய் விவசாயிகளுக்கு கொடுக் முடியாது:”
“குஞ்சன், பூவரசம் மரம் முழுவதும் மசுக்குட்டி. அவை கிணற்றுக்குள் விழுந்திடுச்சு . அதாலை இலைகளுக்கு மருந்து அடித்துப் போட்டம்”
“அம்மா அங்கை தான் பிழை செய்து போட்டியல். இந்த மருந்து அடித்த இலையை விவசாயி ஒருத்தனும் வாங்க மாட்டான் அப்படி வாங்கிறது எண்டால் அரை விலை கொடுத்து தான் வாங்குவினம்”
“இப்ப நீ என்ன அரை விலை குடுத்தே வாங்கப் போறாய் “?:
“அது உங்கள் முடிவு அம்மா”: .
“ அப்ப ஒரு கிழமை போனபின் வாவன் குளை வெட்ட . அதுக்கிடையில் மழை பெய்து இலைகளில் உள்ள மருந்து கழுவிப் போகும் அப்ப வந்து வெட்டிக் கொண்டு போவன்” தங்கம்மா சொன்னாள். அனால் ஒண்டு நீ வரமுந்திக்கு ஊஅரும் ஒருவன் வந்தி இலைகளை கேட்டால் கொடுத்ததிடுவம் சில நேரம் நீ தருகிற காசுக்கும் மேலே அவையள் தருவினம்”: பொன்னம்மா சொன்னாள்
குஞ்சன் சில விநாடிகள் சிந்தித்து விடு “ சரிஅம்மா, எனக்கு திரும்பவும் இவ்வளவு தூரம் திரும்பி வரமுடியாது.. இனி வந்திட்டன் . போன தடவை கொடுத் அளவில் இருந்து மசுக்குட்டி போக இலைகளை கழுவ கொஞ்சம் குறைத்து காசைத் தந்துப் போட்டு வெட்டிக் கொண்டு போறன்:”
“சரி நீ எங்கள் சொந்தக்காரன் எண்ட படியால் சம்மதிக்கிறோம்”, தங்கம்மா சகோதரியோடு கலந்து பேசிப் போடு பதில் சொன்னாள்
குளை பேரம் முடிந்தது.
குளைக்காட்டான் குஞ்சன், பேரம் பேசுவதில் கெட்டிக்காரன்
****
****