களி செய்யற ராகியா

அடியே பக்கத்து வீட்டு மருமகளே, நீ எந்த ஊருடி?

நான் பொறந்து வளந்தது எல்லாம் சென்னைதான் பாட்டிம்மா.

அட அந்த இசுத்துக்குணு, பயம் (பழம்) கசமாலங்கற ஊருக்காரியா?

நீங்க இட்டுக்குணு ஊரைச் சேர்ந்தவங்க. நான் இஸ்துக்குணு ஊருக்காரி.

சரீடி இசுத்துக்குணு, உம் பேரு என்னடி?

எம் பேரு ராகி.

ராகியா? அட களிச் செய்யறாங்களே அந்த ராகியா?

ராகிக் களியக் கேவலமா பேசாதீங்க பாட்டிம்மா. சிறைச் சாலையில ராகிக் களி தின்னுதான் ரவுடிங்க ஒடம்பத் தேத்திட்டு வந்து மேலும் மேலும் ரவுடித்தனம் பண்ணறாங்க.

சரி நீ களித் தின்னுருக்கிறயா?

போன வாரம் வந்தேன். எங்க மாமியார் வீட்டுல தெனம் களிதான் செய்யறாங்க. நல்ல ருசியா இருக்குதுங்க பாட்டிம்மா.

பரவால்லயே ராகிக்கு களி பிடிச்சிருக்கு.
■■■■■■■■■■■■■■■□■■■■■■■◆◆◆◆◆
Rahi = traveller

எழுதியவர் : மலர் (23-Oct-18, 9:31 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 129

மேலே