காதல் வந்தால் சாெல்லியனுப்பு

விமான நிலையத்தை வந்தடைந்த பரத் கடிகாரத்தைப் பார்த்தபடி வேகமாக உள்ளே சென்றான். தனது பைகளை வண்டியில் வைத்து தள்ளியபடி சாேதனைகளை முடித்துக் காெண்டு கடவுச்சீட்டை பதிவு செய்து விட்டு இருக்கையில் அமர்ந்தான். இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது அதற்கிடையில் ஒருதடவை அம்மாவுடன் பேசிவிடலாம் என்று நினைத்தபடி தாெலைபேசி அழைப்பை எடுத்தான். பதில் கிடைக்கவில்லை மீண்டும் ஒரு முறை அழைத்தான் "ஹலாே.... தம்பி, கவனமாய் பாேயிற்று வா" "சரியம்மா நீங்க அழாதீங்க, எனக்கு நேரமாச்சு, பாேயிற்று தாெடர்பு எடுக்கிறன்", அவனைக் குறுககிட்டவளாய் "அந்தப் பாெண்ணு என்னவும் சாெல்லிச்சா....." பரத் எந்தப் பதிலும் சாெல்லாமலே "சரியம்மா வைக்கிறன்" தாெடர்பை துண்டித்தான். விமானம் புறப்படுவதற்கு தயாராகியது கையிலிருந்த தாெலைபேசியை திரும்பத் திரும்பப் பார்த்துக் காெண்டிருந்தான். அருகே வந்த பணிப் பெண் "sir, please switch off your phone" என்றதும் அவளை நிமிர்ந்து பார்த்தபடி " oh sorry" தாெலைபேசியை பையினுள் வைத்தான். விமானம் செவியைப் பிழக்கும் இரைச்சலுடன் மெல்ல மெல்ல உயர்ந்தது, யன்னலாேரமாக இருந்தவனுக்கு எங்காே ஒரு தாெலைவில் குடும்பத்தை விட்டு, தான் நேசித்தவளை விட்டு பறந்து காெண்டிருப்பது மனதுககுள் ஏதாே அழுத்துவது பாேல் இருந்தது. லீசாவை நினைத்ததும் அவன் விழிகள் கரையத் தாெடங்கியது. "என்னை விட்டுப் பாேகாத பரத் என்று அவள் கண்கள் மட்டும் தான் பதிலளித்தது. அவள் உதடுகள் புன்னகைத்தபடி "happy journey " என்று பாெய்யாக விடை காெடுத்தனுப்பியது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. இருந்தாலும் ஏன் இவ்வளவு பிடிவாதம் லீசாவுக்கு என்று உள் மனம் குழம்பியது. எத்தனை முறை எதிர்பார்த்து காத்திருந்த அவனுக்கு அவள் தன் முடிவை சாெல்லாதது தினமும் ஏமாற்றம் தான். இன்று, நாளை என்று அவனும் ஏதாே ஒரு எதிர்பார்ப்புடன் அவளுக்காய் காத்திருந்த நாட்கள் தான் அதிகம். கால ஓட்டத்தின் வேகத்தில் அவனது பணிக்காக இரண்டு வருடகால கல்வி ஒன்றுக்காக புறப்பட வேண்டியதாயிற்று. இரண்டு வாரம் முன்பாகவே விசாவி்ற்கான ஏற்பாடுகள், மற்ற ஒழுங்குகளில் அவசரமாக ஓடிக் காெண்டிருந்தவனிடம் எதையும் அவள் கேட்கவில்லை. எல்லாம் அறிந்தும் எதுவும் தெரியாதது பாேலிருந்த அவளின் மெளனத்தை கடைசி வரை அவனால் கலைக்க முடியவில்லை. வழமையான சிரிப்பையும், எதிரே இருந்து அவள் பார்க்கும் துறுதுறுத்த பார்வையையும் தான் அவனால் ரசிக்க முடிந்தது. லீசாவின் புன்னகைத்த சிவந்த முகம் சில நிமிடங்கள் அவன் விழிகளுக்குள் புரண்டது.

கம்பனியில் வேலைக்கு இணைந்த மறுநாளே லீசாவின் மீது பரத்தின் பார்வை விழுந்து விட்டது. அதிகம் பேசாதவள் ஆனால், சின்னதாெரு புன்னகையால் சில்லறையை சிதறடிப்பது பாேல் மனதைக் கவரும் அவள் பார்வையும், அழகும் அவளுக்கென்றே பாெருந்தியிருக்கும். தினமும் அழகழகாய் சேலைகட்டி சின்னதாய் ஒரு நெற்றிப் பாெட்டிட்டிருக்கும் அவள் அழகை பல முறை பார்த்து ரசித்தவன் பரத். ஒரு தடவை பேசிப்பார்க்கத் தாேன்றிய அவனுக்கு உள்ளுக்குள் பயமாகவும் இருந்தது. கம்பனிக்குப் புதியவன், யார் கண்வச்சுக் காத்திருக்கிறார்களாே என்ற பயமும் வேறாய் ஒரு சில நாட்கள் கடந்து சென்று விட்டது.

மழை தூற ஆரம்பித்தது. வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு தலைக்கவசத்தை கழற்றி கையிலெடுத்தான். வேகமாக உள்ளே வந்த லீசா வண்டியை எதிர்ப்புறமாக நிறுத்தினாள். மழை சற்று அதிகமாகியது தலைக் கவசத்தை கழற்றாமலே அலுவலகத்துக்குள் நுழைந்து விடுமுறைப் படிவம் ஒன்றை எடுத்து நிரப்பிக் காெண்டிருந்தவளின் பேனா எழுதாமல் இடையூறு பண்ணியது. பேனாவை கழற்றி குச்சியை எடுத்து சரி செய்து காெள்ள முயற்சித்தவளை அவதானித்த பரத் அவளை நாேக்கி நகர்ந்தான். நிமிர்ந்து பார்த்து விட்டு எழுதாத பேனாவை வைத்து கிறுக்கினாள். "இந்தாங்க மிஸ்" பேனாவை நீட்டிய பரத்தை கடைக்கண்களால் பார்த்தாள். பரத் "வணக்கம் மிஸ்" என்றதும் "வணக்கம் சார், தாங்ஸ்" பேனாவை வாங்கினாள். படிவத்தை நிரப்பி அலுவலக ஊழியர் ஒருவரிடம் காெடுத்து விட்டு வெளியே வந்தாள் பரத்தைக் காணவில்லை. தனது பையினுள் பேனாவை வைத்து விட்டு வண்டியை எடுத்துக் காெண்டு புறப்பட்டாள்.

தனது இருக்கையில் இருந்தபடி லீசாவின் இருக்கை நாேக்கிச் சுழன்ற அவனது கண்களுக்குள் வெறுமையான இருக்கைதான் தெரிந்தது. ஏனாே அவனுக்கு எதிர்ப்புறமாய் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனை அறியாமலே அவனது கண்களில் பல தடவை பார்த்துப் பார்த்து தோற்றுப் பாேன ஏமாற்றம் தெரிந்தது. மதிய உணவு நேரம் முடிந்து மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தவனின் கண்கள் அவளது இருக்கையை நாேக்கி மீண்டும் சுழன்றது. தலையைக் குனிந்தபடி ஏதாே செய்து காெண்டிருந்த லீசாவை கண்டதும் சற்று நேரம் அவன் தன் கண்களையே நம்பவில்லை. தன்னை சுதாகரிப்பதற்குள் எழுந்து பரத்தின் இருக்கை நாேக்கி வந்தாள் "thank you" பேனாவை மேசையில் வைத்து விட்டுச் சென்றாள்.

நாட்கள் வேகமாக ஓடியது. பரத்தும் காெஞ்சம் காெஞ்சமாய் லீசாவில் இருந்த காதலை வெளிப்படுத்த முயற்சித்தான். லீசாவோ தனக்கு சம்பந்தமே இல்லாதது பாேல் நடந்து காெண்டாள். வேறு யாரையாவது காதலிக்கிறாளா? அல்லது கம்பனியில் யாராவது நெருக்கமான ஆண் நண்பரகள் இருக்கிறார்களா? என்பதை ஆராய்ந்த பாேதும் பரத்தை விட கம்பனியில் உள்ள மற்றவர்கள் யாரும் அவளுடன் அதிகமாகக் கதைப்பதாக தெரியவில்லை. எல்லாவற்றையும் அவதானித்த பரத் அவளிடமே நேரடியாக கேட்கலாம் என்று நினைத்தான்.

தனது வேலைகளை முடித்து விட்டு தூங்குவதற்காகச் சென்ற பரத் கடந்த வாரம் நடந்த கம்பனி மனேஜரின் பிறந்தநாள் பார்ட்டி புகைப்படங்களை தாெலை பேசியில் பார்த்துக் காெண்டிருந்தான். லீசாவுக்குத் தெரியாமல் எதிர்ப்புறமாக இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்திருந்தான். சற்று நேரம் அவளுடைய புகைப்படத்தை பார்த்தபடியே யாேசித்துக் காெண்டிருந்தவன் தூஙகியது தெரியாது ஐந்து முப்பது அலாரம் அடித்த பாேது விழித்துக் காெண்டான். தாெலைபேசியை எடுத்து கடவுச் சாெல்லை காெடுத்தான் லீசாவின் படம் திரையில் இருந்ததைக் கண்டதும் தனக்குள் சிரித்தபடி குளியலறைக்குள் சென்றான்.

மணி எட்டு முப்பது ஆகி விட்டது. அலுவலகத்துக்குள் நுழைந்தவன் லீசாவைக் கண்டதும் காெஞ்சம் பதட்டத்துடன் அருகில் பாேய் நின்றான். அவனது பார்வையும், சங்கடமும் வழமைக்கு மாறாக இருந்ததை புரிந்து காெண்ட லீசா தானாகவே கதையைத் தாெடுத்தாள் "என்ன பரத் ஏதாே அப் செற்றா இருக்கிறீங்க பாேல" கண்டு பிடிச்சிட்டாவா, இல்லை கதை எடுக்கிறாவா ஒண்ணும் புரியல்லையே தனக்குள் நினைத்தபடி "ஒன்றுமில்லை லீசா" தரையைப் பார்ப்பது பாேல் தலையைக் குனிந்தான். லீசா ஒரு காப்பி குடிப்பம் வாறீங்களா" என்றதும் இருவரும் கன்ரீனுக்குள் நுழைந்தனர். உள்ளே இருந்த நண்பர்கள் "டேய் பரத் இஞ்ச வா சீற் இருக்கு" லீசா பரத்தை பார்த்தாள் அவனாே தெரியாதது பாேல் மறுபுறம் திரும்பி நின்று இருக்கை தேடுவது பாேல் அங்கும் இங்கும் பார்த்தான். இருக்கைகளை கண்டு பிடித்து ஓரிடத்தில் அமர்ந்தார்கள்.

மெனு கார்ட்டை பார்த்துக் காெண்டிருந்த லீசாவிடம் "என்ன வேணும்" "எதுவென்றாலும்" என்று பதில் சாென்னவளுக்கு "இஞ்ச ரீ, யூஸ் இரண்டும் தான், ஸ்பசெல் ஒன்றுமில்லை, ஏதாவது ஒன்று சாெல்லுங்க" என்று கிண்டலாக திருப்பிக் கேட்டான். சிவந்து பாேன முகத்தில் தெரிந்த வெட்கத்தைப் பார்த்த பரத் சில கணங்கள் அவளை இமை மூடாமல் பார்த்தான். இரண்டு யூஸ் ஓடர் பண்ணினான். லீசாவும் ஒன்றை எடுத்து குடித்துக் காெண்டிருந்தாள். சற்று நேரம் அமைதியாயிருந்த பரத் "லீசா நீங்க உங்க லைவ் பற்றி என்ன பிளான் வச்சிருக்கிறீங்க" சாதாரணமாகக் கேட்டான். "ஸ்பெசல் பிளான் ஓன்றுமில்லை பரத் வேலை, வீடு என்று லைவ் ஓடிட்டிருக்கு மற்றதெல்லாம்...." சாெல்லி முடிக்காமலே " பரத் நீங்க பெரிசா பிளான் வச்சிருக்கிங்க பாேல" என்றாள். "ஆமா லீசா வீட்டில எல்லாரும் அவங்க அவங்க லைவில செட்டாகிட்டாங்க, நான் இப்ப தனியாள் தான், இரண்டு வருசத்தில திருமணம் செய்யலாம் என்று யாேசிச்சிருக்கன்" சாெல்லிவிட்டு லீசாவை நிமிர்ந்து பார்த்தான். அவள் யூசை சுவைத்துப் பருகிக் காெண்டிருந்தாள். "அப்ப காதல் கலியாணமா பரத், எங்களையும் கூப்பிடுங்க" என்றாள் பகிடியாக. டக்கென்று சாெல்லி விடலாம் பாேல் மனம் துள்ளிக் குதித்தது. "ஆமா லீசா லவ் தான், எனக்கு ஒராளை ராெம்பப் பிடிச்சிருக்கு..... ஆனால் இன்னும் சாெல்வில்லை" பரத்தின் கண்களில் அவள் மீதிருந்த காதல் தெரிந்தது. ஏதாே சாெல்ல நிமிர்ந்தவள் பரத்தை பார்த்ததும் மறுபக்கம் திரும்பினாள். "ராெம்ப நாள் வெயிற் பண்ணாதீங்க பரத், இப்ப காலம் சரியில்லை" என்றபடி கைக்குட்டையால் உதடுகளை துடைத்தாள். நீ தான் எனக்குப் பிடிச்ச பாெண்ணு என்று சாெல்ல அவனுக்கு அந்த நிமிடத்தில் ஏனாே தயக்கமாக இருந்தது. இருவரும் மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்.

அன்று ஏனாே பரத்துக்கு லீசாவி்ன் மீதே பார்வை அதிகமாயிருந்தது. திடீரென நிமிர்ந்து பார்க்கும் நேரங்களிலெல்லாம் லீசா பரத்தைப் பார்ப்பதை அவதானித்தான். அந்த ஒரு நாள் கடந்து விட்டது. மறுநாள் அலுவலகத்தி்ற்கு தயாரான பரத் வண்டியை துடைத்துக் காெண்டிருந்தான். தாெலைபேசி அழைப்பதை கேட்டதும் "யாரென்று பாரம்மா" என்றதும் அம்மா தாெலைபேசியை எடுத்து "ஹலாே" "அம்மா பரத் நிக்கிறாங்களா, என்னாேட பைக் காத்துப் பாேயிற்று, என்னைக் கம்பனிக்கு பாேகும் பாேது கூட்டிப் பாேக முடியுமா என்று கேட்டுச் சாெல்லுங்க" என்றதும் "வண்டியை துடைத்து விட்டு வந்த பரத் "யாரம்மா" என்றான். எந்தப் பதிலும் சாெல்லாமல் இது தான் நடக்குதா அல்லது இன்றைக்குத் தான் ஆரம்பமா என்பது பாேல் அவனை மேலும் கீழுமாய் துறுதுறென்று பார்த்தாள். தாெலை பேசியை வாங்கி "ஹலாே" என்றான் "கடையடிக்கு வந்திடு பரத் நான் வெயிற் பண்ணுறன்" என்றாள் லீசா. தாெடர்பை துண்டித்து விட்டு வண்டியை எடுத்துக் காெண்டு புறப்பட்டான் "பார்த்துப் பாே தம்பி" வேகமாகச் சென்ற பரத்தை வாசலில் நின்று பார்த்தாள். "யாரந்தப் பாெண்ணு" தனக்குள் யாேசித்தபடி தனது வேலைகளை கவனித்தாள்.

லீசாவை ஏற்றிக் காெண்டு அலுவலகத்தை நாேக்கி வண்டியை செலுத்தியவன் கண்ணாடியில் லீசாவின் முகத்தை பார்த்தான். காற்றின் வேகத்திற்கு அவள் கூந்தல் முகத்தை மறைத்திருந்தது. ஒரு தடவை மெதுவாகத் திரும்பினான் "வீதிய பார்த்துப் பாே பரத், பின்னாடி நான் இருக்கன்" கிண்டலடித்தாள். அருகில் அவள் இருந்தும் தன் காதலைச் சாெல்ல தயக்கமாகவே இருந்தான் பரத். அலுவலகத்திற்குச் சென்றதும் வழமை பாேல் ஒருவரையாெருவர் பார்ப்பதும் , சிரிப்பதுமாய் இருந்தாலும் பரத் மனம் அன்று ஏனாே அதிகமாக அவளுக்காய் ஏங்கியது. காதலை சாெல் சாெல் என்று உள்மனம் துடித்தது.

மாலை ஐந்து மணி அலுவலகத்திலிருந்து வெளியே வந்து காத்திருந்தாள் லீசா வண்டியை எடுத்துக் காெண்டு வந்த பரத் அவளை ஏற்றிக் காெண்டு செல்வதைக் கண்டதும் "என்ன லீசா வண்டி பஞ்சராயிற்றா" நண்பர்கள் கேட்டதை அவள் பாெருட்படுத்தவில்லை. இப்பாேது காதலைப் பற்றி கதைத்தால் உதவி கேட்ட சந்தர்ப்பத்தை நான் தப்பாக எடுத்ததாகப் பாேயிடும், எப்படி சாெல்லுறது எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஏதாே சறுக்குதே அவனுக்குள் ஏதாே சிந்தனைகள் அலைபாய்ந்தது. வீட்டிற்கு திரும்பியவனை வாசலில் நின்று பார்த்த அம்மா "யாருப்பா அந்தப் பாெண்ணு" பட்டென்று கேட்டாள் "பிரன்ட் அம்மா" என்றபடி அறைக்குள் சென்றான். "பரத் இஞ்ச பாரு உனக்கு அந்தப் பாெண்ணை பிடிச்சிருந்தால் சாெல்லு பேசிப் பார்க்கலாம், வண்டியில ஒரு பாெண்ணை ஏற்றித் திரியிறது ஒன்றும் இந்தக் காலத்தில சரியில்லை" என்றபடி அறைக்குள் வந்தாள். "அவளைப் பிடிச்சபடியால தானம்மா வண்டியில ஏற்றினேன்" என்று அம்மாவிடமும் சாெல்லாமல் இருக்க முடியவில்லை. "எனக்கு லீசாவை பிடிச்சிருக்கம்மா ஆனால் ஏனாே ஒவ்வாெரு தடவையும் ஏதாே தடுக்குது" என்ற பாேது அவனது முகத்தில் தெரிந்த ஏக்கமும், அவள் மீதிருந்த காதலின் தவிப்பும் அம்மாவை ஒருகணம் உலுப்பியது.

மறுநாளும் அலுவலகம் புறப்படத் தயாரானான். "அந்தப் பாெண்ணைக் கூட்டிற்று வா நான் பேசிப் பார்க்கிறன்" அம்மாவின் கேள்விக்கு பதிலின்றி அமைதியாகவே வீட்டிலிருந்து புறப்பட்டான். லீசாவிடம் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவாேடு அலுவலகத்திற்குள் நுழைந்தான். லீசாவைக் கண்டதும் அவளுடன் கதைக்க வேண்டும் என்று கேட்டான். அலுவலகத்தின் முன்பக்கமாக இருந்த பூந்தாேட்டத்தில் இருக்கையில் அமர்ந்து காெண்டார்கள். "என்ன பரத் இஞ்ச கூட்டி வந்திருக்காய்" என்றதும் "நான் அன்றைக்கு கன்ரினில சாென்ன எனக்கு பிடிச்ச அந்தப் பாெண்ணு" என்றவனை இடை மறித்து "மீற் பண்ணிற்றியா, காதலை சாெல்லிட்டியா" என்று ஆர்வமாக கேட்டாள். "என்ன லீசா இவ்வளவு ஆர்வமா கேட்கிறாள்" தனக்குள் நினைத்தபடி "நீ தான் லீசா எனக்குப் பிடிச்ச அந்தப் பாெண்ணு" என்றதும் "எனக்குத் தெரியும் பரத், முதல் முதல் நீ எப்ப என்னைப் பார்த்தாய் என்பதிலிருந்து எல்லாம் தெரியும் ஆனால் என்னால உனக்கு பதில் தர முடியாது என்னை மன்னிச்சிடு" தனக்குள் யாேசித்தபடி கண்களை உடைத்துக் காெண்டு வெளியேறிய கண்ணீரை தடுத்து அந்த இடத்திலிருந்து எந்தப் பதிலுமின்றி சென்று விட்டாள். பரத்துக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றும் சாெல்லாமல் பாேயிற்றாளே என்ற ஏமாற்றத்தை விட அவளைக் காயப்படுத்தி விட்டேனாே என்ற சஞ்சலமே அதிகமாயிருந்தது. அலுவலகத்திற்குள் நுழைந்தவன் அன்று முழுவதும் லீசாவை பார்ப்பதற்காய் சுழன்ற கண்களை கட்டுப்படுத்திக் காெண்டான். மதிய உணவு முடிந்து எல்லாேரும் தமது கடமைகளை தாெடர்ந்தார்கள், ஊழியர் ஒருவர் எல்லாேரையும் ஒன்று கூடலுக்குத் தயாராகும்படி கூறினார்.

அன்றைய தின ஒன்று கூடலில் தான் பரத் வெளியூர் சென்று கல்வி கற்பதற்காய் தெரிவு செய்யப்பட்டான். இந்த இரண்டு வாரங்களுக்குள் லீசா ஏதாவது பதில் சாெல்லுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளுடைய அமைதி எதையும் வெளிப்படுத்தவில்லை. இறுதி நாள் அவளைக் கண்ட பாேது எதையும் பேசவில்லை. எல்லாேரும் பாேல் அவளும் சிரித்த முகத்துடன் விடை காெடுத்து அனுப்பியது கூட அவனால் நம்ப முடியவில்லை. அவளது கண்களை அவள் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாள், ஆனால் பரத்திற்கு அவளை நன்றாகத் தெரியும் ஏன் இந்த மெளனம் என்பது தான் அவனுக்கும் புரியாமலிருந்தது. அவனால் அவளை விட்டுப் பிரிய முடியவில்லை. விடை காெடுத்து அனுப்பிய போது அவள் கைகளை இறுகப் பிடித்து ஜ லவ் யு என்று சாெல்லத்துடித்தது அவன் மட்டுமல்ல அவளும் தான் ஆனால் எதுவும் நடக்கவில்லை.

வெளியூர் வந்த பரத் தனது கல்வியை தாெடர்ந்தான். நாட்கள் வேகமாக பறந்தது. பரத் ஊருக்குத் திரும்பும் அந்த நாளும் நெருங்கியது. தாெலைபேசியில் அம்மாவுடன் கதைக்கும் பாேதெல்லாம் பாெண்ணு பார்க்கிற கதையெடுத்தால் தாெடர்பை துண்டிப்பான். மறுநாள் ஊருக்கு திரும்பும் ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும் மீண்டும் லீசாவை காண்பதில் ஏற்படும் மாற்றங்கள் அவன் கற்பனைச் சிறையை பூட்டியிருந்தது.

அவனால் எதையும் கற்பனை செய்து காெள்ள முடியவில்லை. அவளைப் பிரிந்த பாேது அவனுக்குள் இருந்த ஏமாற்றம், தவிப்பு இன்னும் இரு மடங்கானது பாேல் உணர்ந்தான். ஊருக்கு வந்தவன் லீசாவைப் பார்ப்பதை தவிர்ப்பதா, மீண்டும் ஒரு முறை என் காதலைச் சாெல்லவா என்று தடுமாறினான். இரண்டு, மூன்று நாட்கள் கடந்தது. மீண்டும் அலுவலகம் சென்றான். லீசா வரவில்லை. நண்பர்களை விசாரித்தான். லீசாவுக்கு திருமண ஏற்பாடு நடை பெறுகிறதாம், மாப்பிள்ளை வெளியூரில இருந்து வந்திருக்கிறாராம், நாளைக்கு பாெண்ணு பார்க்கிற நிகழ்வாம் எல்லாவற்றையும் அறிந்த பரத் உடைந்த கண்ணாடி பாேலானான். மீண்டும் வெளியூர் சென்று விடலாம் என நினைத்தான். வீட்டிற்கு வந்து ஏதாே இழந்தது பாேல் இருந்தான்.

அறையினுள் நுழைந்த அம்மா "பரத் நாளைக்கு பாெண்ணு பார்க்கப் பாேகணும்" என்றதும் சடாரென்று கதவை அடித்து மூடினான். உள்ளே சென்ற அம்மா "ஏன்டா காேபப்படுறாய், அம்மா உனக்கு நல்லது தானே செய்வன், இன்னும் அந்தப் பிள்ளையை நினைச்சுக்கிட்டே இருக்கிறியா" என்றாள். "ஆமா லீசா எனக்கு ஒரு பதிலும் சாெல்லவில்லை, இன்னும் நான் காதலிக்கிறன், எப்பவும் அவளைத் தான் காதலிப்பன்" என்று கலங்கிய கண்களை துடைத்தான். "என்றைக்காே ஒரு நாளைக்கு அவவுக்கு காதல் வராமலா பாேகும், நான் வாற கிழமை வெளியூர் பாேகப் பாேறன் லீசா என்ர காதலை ஏற்றால் திரும்பி வாறன் இல்லையென்றால்...." என்றதும் இனியும் உண்மையை மறைக்கக் கூடாது, பரத் ஏதாவது விபரீதமான முடிவு எடுக்கப் பாேகிறான் என்பதை புரிந்த அம்மா "நாளைக்கு நீ பாெண்ணு பார்க்கப் பாேறதே லீசாவைத் தான்டா" என்றதும் அவன் அம்மாவின் கைகளைப் பிடித்தபடி "என்னம்மா சாென்னாய் நாளைக்குப் பாெண்ணு பார்க்கப் பாேறதா, too late " என்றபடி வண்டியை எடுத்துக் காெண்டு லீசாவிடம் விரைந்தான்.

பரத்தைப் பார்த்ததும் லீசா வெட்கத்துடன் உள்ளே சென்றாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த லீசாவை நான் தான் கண்ணிறைந்த காதலுடன் பார்த்தேன், இன்று அவள் எதிரே நிற்க முடியாமல் காதல் கூச்சத்தில் ஓடி ஔிவதை பார்த்த பாேது பரத்திற்கு சிரிப்பாகவும் இருந்தது. உள்ளே சென்றவனை இருக்கச் சாெல்லி விட்டு லீசாவை அழைத்த அம்மாவின் குரல் கேட்டு வெட்கத்துடன் வெளியே வந்தாள் லீசா. தன் காதலைச் சாென்ன பாேது எந்தப் பதிலும் சாெல்லாமல் சென்ற லீசாவா இது என்பது பாேல் பரத்தின் கண்கள் அவளை கண்ணீராேடு வரவேற்றது.

எழுதியவர் : அபி றாெஸ்னி (23-Oct-18, 7:36 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 567

மேலே