’நானும்’ இயக்கம் Mee Too --------------கடிதங்கள்------------தொகுப்பு

1
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் பெயரைக் கண்டேன். கஷ்மீர் கதுவா வில் ஒரு முற்போக்கு ஆசாமி பற்றியும் படித்தேன்.

என்னிடம், சின்மயியை, “அய்யங்கார் ----------” எனப் போற்றும் ஒரு ஜாதி சங்கத் தலைவரின் ஆடியோ தகவலும் வந்தது.

இது ஜாதி, மத, கொள்கைகளைத் தாண்டிய குற்றம்.வழிதலும், வழிதல் நிமித்தமும் ஆண்களின் வழி. இதில் பேதங்கள் இல்லை.மாறுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

பாலா
------------------------
2
லீனா மணிமேகலை அவர்களுக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த குறைந்த எண்ணிக்கை இலக்கியவாதிகளில் ஒருவர் நீங்கள் என்று அறிந்ததில் மகிழ்ச்சி.

ஆனால் லீனா ஏன் இந்த நிகழ்வை இவ்வளவு நாள் சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறீர்கள். பலருக்கு இந்த விஷயம் புரியவில்லை என்பது உண்மையிலேயே வியப்பாக உள்ளது.

பொது இடங்களில் நடக்கும் அத்துமீறல்களைவிட வேலையிடத்தில் தெரிந்தவர்கள் ஏற்படுத்தும் உளைச்சல் தான் எங்களை அதிகம் கலங்க வைக்கிறது.

கதைகளில் ஒரு கதாபாத்திரத்தை பாதி பந்தியில் எழுப்பிவிடும் காட்சி அடிக்கடி வரும். நாஞ்சில் நாடன் கதைகளில்…அந்த சம்பவம் அந்த எழுத்தாளருக்கு எப்போதோ ஒரு முறை நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அது அவர் ஆழ்மனதில் அவ்வளவு தூரம் இறங்கியிருக்கிறது. ஏன்? கடந்து சென்றிருக்கலாமே?

ஏனென்றால் அது எதிர்பாராத நேரத்தில் நடக்கும் பெரிய அவமானம். நாங்களும் படித்து பயிற்சி முடித்து நம்பிக்கையோடு தான் வேலைக்கு வருகிறோம். வேலையிடத்தில் இப்படி நடப்பது பாதி பந்தியில் எழுப்பிவிடப்படுவது போன்ற அவமானம் தான்.

நித்யா

--------------------------------------------------------------

மிடூ விஷயத்தில் இன்றைக்குக் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில்களை நீங்கள் தருண் தேஜ்பால் கட்டுரையில் எழுதியிருந்ததை வாசித்து ஆச்சரியப்பட்டேன். அன்றைக்கே ஏன் சொல்லவில்லை, ஏன் நீதிமன்றம் செல்லவில்லை போன்ற எல்லா கேள்விகளும் அதில் பதில் சொல்லப்பட்டுள்ளன. அப்படிச் சொன்ன ஒரு பெண் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார் என்பது இன்றைக்கு இப்படிக்கேட்கும் மோரோன்கள் அன்றைக்கும் அதையே கேட்டனர் என்பதும் அக்கட்டுரையில் உள்ளது

செல்வி ராஜேந்திரன்
--------------------------------------
4
மிடூ இயக்கம் எப்படியெல்லாம் தோல்வியடையும் என்பதற்கான எல்லா தடையங்களும் நம்மூர் பெண்ணியப்புயல்கள் எழுத ஆரம்பித்ததுமே தெரிந்துவிட்டது. தலித்தியத் தீவிரப்புயல்களும் இதையே செய்தார்கள். தங்களை ஒர் அதிதீவிரத் தரப்பாக இவர்கள் காட்டிக்கொள்வார்கள்.தங்கள் சொந்த எதிரிகளையும், தங்கள் குரலை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர்களையும் பெண்ணுக்கே எதிரிகள் என்று முத்திரை குத்துவார்கள். ஆதரித்துப்பேசினால் அதில் உள்நோக்கம் கண்டுபிடிப்பார்கள். மௌனமாக இருந்தால் கள்ளமௌனம் என்பார்கள். மொத்தத்தில் இவர்களின் மனநோய்க்கு உண்மையிலேயே உருவாகிவந்துள்ள ஒரு தவிர்க்கமுடியாத இயக்கத்தைப் பலிகொடுத்துவிடுவார்கள்

ஆர்.ராஜசேகர்
---------------------------
சமீபத்தில் முகநூலில் ஒரு எழுத்தாளர் மீது மிடூ குற்றச்சாட்டு, ஒருவர் முகநூலில் உள்பெட்டிக்குச் சென்றபோது செக்ஸுக்கு அழைத்துவிட்டார் என்று சில பெண்கள் சொல்ல உங்கள் வாசகி வெண்பா கீதாயன் அதை வெளிப்படுத்தியிருந்தார். குற்றம்சாட்டப்பட்டவருடைய முகநூல்பக்கம் சென்று பார்த்தேன். சீரான இடைவெளியில் பாலியல்விஷயங்கள். பெரும்பாலும் பெண்களுக்கானவை. பெண்களை தூண்டில்போடுவதற்காக மட்டுமே நடத்தப்படும் முகநூல்பக்கம் அது. உண்மையில் முகநூல் என்பதே மார்க்கால் அதன்பொருட்டு உருவாக்கப்பட்டது. அதைத்தான் அந்தப்பக்கத்தை எழுதுபவர் செய்கிறார்.

முகநூலிலும் இணையத்திலும் அறிவார்ந்த விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எழுத்தாளர்கள், கவிஞர்கள் எவ்வளவோபேர் இருக்கிறார்கள். அரசியல்பேசுபவர்கள் இருக்கிறார்கள். வெறும் எண்டெர்டெய்ன்மெண்ட் என்று சொல்லப்போனாலும்கூட சினிமா பற்றியெல்லாம் சுவாரசியமாக எழுதுபவர்கள் பலர் உள்ளனர். அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த இணையதளத்திற்கு இந்தப்பெண்கள் ஏன் கூட்டம் கூட்டமாகச் செல்கிறார்கள்? இது மட்டும் அவர்களிடம் சரியாக ஏன் சென்றுசேர்கிறது? இந்தப்பெண்களிடம் தமிழில் எழுதும் ஒரு நான்கு எழுத்தாளர் பெயர்களைக் கேட்டுப்பாருங்கள், தெரியாது. இதுமட்டும் எப்படி நேராக அங்கே கொண்டுசென்றுவிடுகிறது?

அந்த முகநூல்பக்கத்தில் நாலைந்து மொக்கை ஸ்டெட்டஸ். அதன்பிறகு உடனே செமிபோர்ன். போர்ன் சைட்டுகள் பற்றிய செய்திகள். பெண்களை ஆதரித்து அவர்களின் துயரம் கண்டு உருகுவதுபோல ஒரு போஸ்ட். உடனே மீண்டும் போர்னோகிராஃபி. வீட்டிலேயே பெண்கள் எப்படி மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்று எங்கோ வாசித்ததை எடுத்துப்போட்டு குறிப்பு எழுதுபவனை எழுத்தாளன் என்று நம்பி எழுத்துவல்லமையால் ஈர்க்கப்பட்டு அறிவார்ந்த உரையாடலுக்குப் போனார்களாம். உரையாடினார்களாம். உடனே அவன் கூப்பிட்டுவிட்டானாம். அதெப்படி கூப்பிடப்போச்சு என்று ஒரே லபோதிபோ. மிடூ இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவது இத்தகைய பெண்கள்தான்.

நடுவயதான ஒரு பெண் அத்தனை அப்பாவியாகவா இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்? அவன் கூப்பிடவேண்டும் என்றுதானே அங்கே செல்கிறார்கள். அதன்பின்னர் அவனுடைய ஏதோ இயல்பு பிடிக்கவில்லை. உடனே மிடூவா? இந்தப்பெண்களை மிடூ இயக்கத்தில் சேர்ப்பது வழியாக உண்மையாகவே உழைக்கப்போன இடத்தில் ஆண்தொல்லைகளை அனுபவிக்கும் பெண்களையும் அவமதிக்கிறார்கள். இதை உங்களுக்கு எழுதுவதே வெண்பா கீதாயனின் பக்கத்தில் உங்கள் படம் இருந்ததனால்தான். உடனே என்னை ஆணாதிக்கம் என்று சொல்வார்கள். நான் பெண்தான். என் ஐடியை பார்க்கவும்.

கே
---------------------------

ஜெ
மின்னஞ்சல்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------"மீடு" மூலம் பிரபலங்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து கூறி வருகின்றனர். இந்நிலையில், சுசி கணேசனுக்கு எதிராக லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததை அடுத்து லீனாவுக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் ஏற்கனவே அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் மீண்டும் தற்போது நஷ்ட ஈடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து டிவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக டிவிட்டரில் இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். தன் மீது பொய்யான புகார் தெரிவித்ததாக ஏற்கனவே லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்கு ஒரு ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கும்படி இயக்குனர் லீனா மணிமேகலைக்கு உத்தரவிடக் கோரி இயக்குனர் சுசிகணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீ டூ பரப்புரை நாடெங்கும் பலமாக பரவி வரும் நிலையில் சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக ஆரம்பித்து வைக்க, அது திரைத்துறையினரை பிடித்து ஆட்டுகிறது.

2005-ம் ஆண்டு ஒரு விழாவில் தொகுப்பாளராக பங்கேற்ற தன்னை வீட்டில் விடுவதாக காரில் ஏற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமான லீனா மணிமேகலை மீடூ பரப்புரையில் குற்றம் சாட்ட உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த சுசி கணேசன் அதை மறுத்தார்.

அரைமணி நேர சந்திப்பில் ஒருவரின் காரில் ஏறும் அளவுக்கா ஒரு பெண் இருப்பார் இதிலிருந்தே அவர் கூறுவதில் உண்மை இல்லை என்னிடம் சொகுசு கார் இல்லை. காரையும் நான் ஓட்டுவதே இல்லை. ஆகவே அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அவர் குற்றச்சாட்டு கூறிய பின்னர் 3 மாதம் கழித்து என்னுடைய புத்தக அறிமுக விழாவுக்கு தொகுப்பாளராக இருந்தார்.

ஆகவே அவர் கூறுவது முற்றிலும் தவறு. மேலும் இப்படி அவர் பதிவு செய்தவுடன் நானே முதலில் போலீஸில் ஆன்லைனில் புகார் அளித்துள்ளேன். தற்போது அவர் மீது வழக்கு தொடர்வதுடன், 1 ரூபாய் கேட்டு மன நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் முன் தனது வழக்கறிஞர் மூலம் இயக்குனர் சுசிகணேசன், லீனா மணிமேகலைக்கு எதிராக சிஆர்பிசி சட்டம் 200-ன் கீழ் வழக்கு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில் ”தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு அடிப்படை ஆதாரமின்றி பொய்யான புகாரை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார், சுய விளம்பரத்திற்காக பரப்பப்பட்டுள்ள புகாரால் தாம் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதால் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இது தவிர வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கும் போட உள்ளார்.

இந்து தமிழ் திசை
Updated : 17 Oct 2018
--------------------------------------------------------------------------------
மீ டூ குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, "பெண்களை கரும்பு என நினைத்து அணுகியவர்களை இரும்பு என நினைக்க வைத்திருக்கிறது இந்த மீடூ இயக்கம். பாஜகவோ மத்திய அரசோ பெண்கள் பாதுகாப்பை முக்கியமாகவே கருதுகிறது. மீ டூ புகார்கள் விசாரிக்கப்படும் என தேசியத் தலைவர் அமித் ஷாவும் கூறியிருக்கிறார். ஆனால், மீ டூ குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதை கட்சியின் கருத்து என்று சொல்ல முடியாது" என்றார்.

எழுதியவர் : (23-Oct-18, 7:28 pm)
பார்வை : 107

சிறந்த கட்டுரைகள்

மேலே