இலையுதிர்காலம்

தன் உயிர் உதிரப் போகிறது
என்று தெரிந்து
கவலையில்
கண்ணீரால் தன் தேகத்தை
நனைத்துக் கொண்டதோ?
இல்லை,
தன்னை வளர்த்த
தாய் மண்ணின் மடியில்
மடிய போகிறோமென்று
ஆனந்த கண்ணீர் வடிக்கின்றதோ!?
தெரியவில்லை....
#இலைகள்

இலையுதிர்காலம்
வசந்த காலத்தின் தொடக்கம்

எழுதியவர் : சேக் உதுமான் (24-Oct-18, 9:11 pm)
பார்வை : 3131

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே