மீ டூ
ராமலிங்கம் நாளை முதல் தன்னுடைய 33 வருடம் ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து தனது 60 வயது நிரம்பிய உடன் ஓய்வு பெறும் நாளை மனதில் அசை போட்ட படி பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்
வணக்கம் வாத்தியார் அய்யா என்ற சத்தத்தை கேட்டு தலை நிமிர்ந்து பார்த்தார் எதிரே சிவகாமியின் தோப்பனார் நின்று கொண்டு இருந்தார் பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டு சிவகாமி எப்படி இருக்கிறாள் என்று கேட்டதிற்க்கு அய்யா நீங்கள் அவளுக்கு கல்வி கற்று கொடுத்ததிலிறுந்து என் மகள் நன்றாக படித்து இப்போது பெரிய விளம்பர நிறுவனத்தின் உயர்ந்த மேலாளராக வேலை செய்து வருகிறாள் என்று சொன்னதை கேட்டு மன நிறைவாக அன்றைய நாளை எண்ணி பார்த்தார்
ஒரு நாள் சிவகாமி வீட்டு பாடம் செய்து வரவில்லை என்பதற்காக அவளின் காதை திருகி ஏன் வீட்டு பாடம் செய்து வரவில்லை என்று
கேட்டு சிவகாமியை பெஞ்சமின் மீது நிற்க வைத்ததை எண்ணிய படி வீட்டிற்கு சென்றார்
அப்பா நாளை மறு நாள் என் இஞ்சினியர் படிப்புக்கு பணம் கட்டும் கடைசி நாள் என்று சொன்ன மகனுக்கு தெரியும் என்பதை போல் தலையை ஆட்டி நாளை எனது கிராஜ்வட்டி பணம் கிடைத்த உடன் மகனின் படிப்புக்கான தொகையை கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் தூங்க சென்றார்
மறுநாள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றார் பள்ளியில் அவருக்கு பிரிவு உபச்சார விழா ஏற்ப்பாடு செய்து இருந்தார்கள் பள்ளியின் விழா மேடையில் அமர்ந்து இருந்தவர்கள் அனைவரும் ராமலிங்கம் பணியை பாராட்டி பேசி கொண்டு இருந்தார்கள்
அப்போது ஒரு இன்ஸ்பெக்டர் இரண்டு காவலர்கள் என மூவரும் விழா மேடையில் ஏறி ராமலிங்கத்திடம் உங்களை கைது செய்ய வந்துள்ளோம் என்ற சொன்ன உடன் அவருக்கு ஒன்றுமே புரியாமல் நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்க உங்கள் மீது பாலியல் புகார் உள்ளது கைது செய்கிறோம் என்று சொன்னார்கள்
ராமலிங்கம் இன்ஸ்பெக்டரிம் நான் வாழ்நாளில் அத்தகைய தவறு செய்தவன் இல்லை என்று மறுக்க அதற்கு இன்ஸ்பெக்டர் நீங்கள் 15 வருடத்திற்கு முன் சிவகாமி என்ற பெண்ணின் காதை தடவி பாலியல் வன்முறை நிகழ்த்தியதாக பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து புகார் இருப்பதால் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர்
அதற்கு மேல் எதுவும் பேசாமல் தன் மகனின் எதிர் காலம் தன் கண் முன்பே சிதைவதை கண்டு மேடையை விட்டு வெளியேறி போலீஸ் ஜீப்பில் ஏறினார்