அரக்கன் - தொடர்ச்சி
" ஒரு போக்குவரத்துத்துறை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லையெனில் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? காவல்துறை தூங்குகிறதா? ",என்று பரப்புரைகளை ஊடகங்கள் வாசிக்கையில் போக்குத்துறை அமைச்சர் செய்த குற்றங்களை பட்டியலிடுகிறது காவல்துறை.
அவற்றை வெளியிடத் தயாராகும் போது வெளியிடக் கூடாது என மேலிடத்திருந்து அறிக்கை வருகிறது.
அதற்கு முன்பாகவே அந்த பட்டியல் ஊடகங்களில் வெளிப்பட அரசியல் களத்தில் பல பெருந்தலைகள் மாட்டுகிறார்கள் மக்களிடம்.
மக்கள் தான் எடுப்பார் கைப்பிள்ளைகளாச்சே!
இரண்டு நாட்கள் பேசப்பட்டது.
பின்பு மறக்கடிக்கப்பட்டது.
கொலையாளி அமைச்சரை கொல்ல ஏற்படுத்திய விபத்தில் இறந்துவிட்டதாக வழக்கும் முடிவடைந்தது.
ஒருவாரம் கடந்திருக்கும்.
உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை காணவில்லை.
அதோடு வழக்கறிஞர் ஒருவரும் காணாமல் போயிருந்தார்.
சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவரும் காணாமல் போயிருந்தார்.
ஊடகப் பசிக்கு தீனி போடப்பட்டதாக விவாதப் பொருளானது.
தேடல் பணியில் காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டார்கள்.
இரண்டு நாட்கள் கழிந்தன.
மூன்றாம் நாள் காலை உச்சநீதிமன்றம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
காணாமல் போன நீதிபதி தன் இருக்கையில் பிணமாக இருக்க வைக்கப்பட்டிருந்தார்.
காணாமல் போன வழக்கறிஞர் அவருக்கான இருக்கையில் பிணமாக சாய்ந்திருந்தார்.
காவல்துறை மற்றும் தடவியல் நிபுணர் அங்கு ஏதாவது தடயம் கிடைக்கிறதா? என்று சோதனை செய்தனர்.
சோதனையில் நீதிபதியின் பிணத்திற்கு அருகே ஒரு காகிதமும், முனை உடைக்கப்பட்ட பேனாவும், வீடியோ கேமராவும் கிடந்தன.
அவை வழக்கின் முக்கிய ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதோடு வழக்கறிஞர் அருகிலும் ஒரு காகிதம் இருந்தது.
அதுவும் முக்கிய தடயமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
பிரேதங்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வழக்கிற்காக சிபிஐ சுப்ரமணியனை நேயமித்தது.
சுப்ரமணியன் சுறுசுறுப்பான துப்பறியும் புலி.
தடயமாக கிடைத்த வீடியோ ஆராய்ந்தார்.
அதில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட காட்சி பதிவாகி இருந்தது.
வீடியோவை ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே சுப்ரமணியன் கைபேசி அலறியது.
எடுத்து யாரென கேட்க,
" உடனடியாக சிறைச்சாலைக்கு வரவும். ", என்று கூறி அலைபேசி துண்டிக்கப்பட்டது.
சிறைச்சாலைக்கு சென்ற சுப்பிரமணியன் காண அதிர்ச்சியான காட்சி காத்திருந்தது.
காணாமல் போன குற்றவாறியில் உயிர்நாடியில் சுருக்கிடப்பட்டு தூக்கிலிடப்பட்டிருந்தான்.
பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு தன் அலுவலக அறைக்குத் திரும்பிய சுப்பிரமணியன் கிடைத்த ஆதாரங்களை பரிசோதித்தார்.
அந்த வீடியோவையும் காகிதங்களையும் ஆராய்ந்ததில் நீதிபதி, வழக்கறிஞர், கைதி என மூன்று பேரும் கொல்லப்பட்டதற்கான காரணமும் கொலை செய்யப்பட்ட விதமும் பதிவாகி இருந்தது.
ஆனால் கொலையாளி யார்? என்று அந்த வீடியோவில் பதிவாகவில்லை.
இந்த ஆதாரங்களை மேலிடத்தில் ஒப்படைத்தார் சுப்பிரமணியன்.
அதை ஆராய்ந்த மேலிடம்
ஒரு நீதிபதியே குற்றம் நடப்பதற்கு காரணமாக இருந்தார் என்கிற உண்மை மக்களுக்கு தெரிந்தால் நீதிமன்றங்கள் மேல் அதிருப்தி வருமென மூடி மறைத்தனர். காவல்துறை அதிகாரி
சுப்பிரமணியனிடம் இருந்து வழக்கு சிபிஐக்கு மாறியது.
கைதி இறந்ததற்கு காரணம் அவன் தப்பிச்செல்ல முயன்ற போது மின்சார முள்கம்பியில் சிக்கியதாக கூறப்பட்டது.
நீதிபதி மற்றும் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு நபர் தயார்செய்து கைது செய்தார்கள்.
அந்த நபரும் தனக்கும் கொல்லப்பட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞருக்கும் இடையே தனிப்பட்ட பகை இருந்ததாகவும்,
அதனால் கடத்தி கொலை செய்து பிணங்களை நீதி மன்றத்தில் போட்டதாகவும் வாக்குமூலம் கொடுக்க,
அந்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
அந்த போலி கொலையாளிக்கு சிறைச்சாலையில் இராஜ வாழ்வுதான்.
ஒருவழியாக உண்மையை மக்களிடமிருந்து மூடி மறைத்து வழக்கை முடிவுக்கொண்டு வந்தது காவல்துறை அரசாங்க ஆணைக்கிணங்க.
எதிர்கட்சிகள் பல இது குறித்து அறிக்கைவிட்டு வந்தன அரசியல் நோக்கத்திற்காக.
உண்மையை பூசி மொழுகிய பொய்கள் மீடியாக்கள் மக்களிடையே பரப்புரையாக்கி வியாபார லாபம் தேடிக்கொண்டிருந்தன.
எது உண்மை?
அரசாங்க அதிகாரிகள் சொல்வதெல்லாம் உண்மையா?
எது நீதி?
நீதிமன்றங்களில் உண்மையில் நீதி நிலைநாட்டப்படுகிறதா?
உண்மையில் நீதி வழங்கப்படுவதனால் சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்கள் குறைந்திருக்க வேண்டுமே!
ஏன் குறைவில்லை?
இலைமறைக்காயாக குற்றங்களைச் செய்யும் நீதிபதிகள் அதிகம்.
அவர்களிடம் நீதி வேண்டினால் கிடைக்குமா?
அரக்கர்கள் உருவாதில்லை.
உருவாக்கப்படுகிறார்கள். ஒரு பெண்ணை
கற்பழித்துக் கொன்றவனுக்கு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கினால் அதற்கு மேல் முறையீடு என உச்சநீதிமன்றம் போய் ஆயுள் தண்டனையாக தண்டனை குறைப்பு பெற்றுவிடுகிறான்.
நீதிக்கு தீர்ப்பு ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, பத்து தீர்ப்புகள் இருக்கலாமா?
முதலில் குற்றவாளி,
அப்புறம் நிரபராதி,
மறுபடியும் குற்றவாளி,
இப்படி மாற்றி மாற்றி தீர்ப்பெழுதும் நீதிபதிகள் உள்ள வரை குற்றவாளிகள் தைரியமாகவே குற்றம் புரிவார்கள்.
நீதிபதிகள் செய்யும் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன.
சாமானிய மனிதனை குற்றத்தை விவரிக்கும் பத்திரிக்கைகள் அரசியல், நீதிமன்றம் சார்ந்தவர்களின் குற்றங்களை மூடி மறைத்து மென்று முழுங்கி வெளியே சொல்கின்றன.
இதெல்லாம் குற்றமில்லையா?
எனக்கு புத்தி சொல்ல நீ ஒன்றும் புத்தன் அல்ல என்று கூறும் பலருக்கு தைரியமில்லை.
சாமானியன் குரல் யாருக்கும் கேட்பதில்லை.
இதுவே சங்கங்கள் சொன்னால் எல்லாரும் கவனமும் அங்கே செல்கிறது.
விமானத்தில் ஒருவர் கோஷமிட்டார் என்று கைது செய்யப்பட்டதற்கு இணையமே அலற கோஷமிட்ட நாம் சாதி, மத வெறியால் அதிகரிக்கும் கொலை, கொடூர அநியாயங்களுக்கு எதிராக என்ன செய்தோம்?
இணையத்தில் பலர் குரைப்பர் சாதி, மதம் வேறுபாடு கூடாதென.
ஆனால் சாதி அடிப்படை சலுகை பெற முதல் ஆளாய் நிற்பர்.
அது தானே நம் அன்றாடம்.
( உண்மை வெளிவரும்... )