மச்சி

ஏன்டப்பா மணிமாறா...

என்னங்க பாட்டிம்மா?

அமெரிக்கா உனக்கும் மணிமலருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சா. அங்க போயிட்டு அஞ்சு வருசம் இருந்துட்டு அழகான ஒரு தேவதையைப் பெத்து எடுத்துட்டு வந்திருக்கிறீங்க. தமிழர் வழக்கப்படி இந்த அழகு ராசாத்திக்கு இந்திப் பேரத்தானே வச்சிருக்கறீங்க?

பாட்டிம்மா நமக்கு இந்தி தெரியாத மொழி. தமிழர்களுக்கு நம்ம செம்மொழி தமிழும் ஆங்கிலமும் தான் தெரியும். அதனால பெரும்பாலான தமிழர்கள் திரைப்பட ரசனையினால இந்திப் பேருங்களத்தான் பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. நான் வித்தியாசமா ஜப்பான் மொழிப் பேர எங்க செல்லத்துக்கு வச்சிருக்கிறேன்.

சப்பானுப் பேரா?

என்னப் பொறுத்தளவில ஜப்பான் மொழியும் நமக்குத் தெரியாது. இந்தியும் தெரியாது. அதனால ஜப்பான் மொழிப் பேரையே வச்சுட்டேன்.

என்ன பேருடா பேரா. சீக்கிரம் சொல்லுடா.

எங்க பொண்ணுப் பேரு 'மச்சி'.

என்னது 'மச்சி'யா? என்னடா இந்த அழகான கொழந்தைக்கு 'மச்சி'ன்னு பேரு வச்சிருக்கற? சனங்க சிரிக்கறதுக்கா.

நம்ம மக்கள் அர்த்தம் உச்சரிக்க முடியாத இந்திப் பேருங்கள வைக்கறபோது நல்ல அர்த்தமுள்ள ஜப்பானியப் பேர எங்க பொண்ணுக்கு வச்சிதலே என்ன தப்பைக் கண்டுபிடிச்சீங்க?

'மச்சி'க்கான அர்த்தத்தைத் சொல்லுடா.

'மச்சி' ன்னா 'அதிர்ஷ்டக்காரி'ன்னு அர்த்தம்.

அட, நல்ல அர்த்தம் தான். எம் மச்சிச் செல்லம் இங்க வாடி.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆■■◆◆

Machi = fortunate one

எழுதியவர் : மலர் (28-Oct-18, 10:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 147

மேலே