உனவட்டுன என்ற ஊரின் கதை

அன்று என்னோடு கனடா வங்கி ஒன்றில் வேலை செய்யும் எனது சிங்கள நண்பன் குணவர்தனாவோடு பகல் போசனம் உண்ணும் போது அவன் சொன்னான்: “மச்சான் அடுத்த கிழமை நான் பிறந்த உனவட்டுன கிராமத்துக்கு ஐந்து வருடங்களுக்கு பிறகு போறன். திரும்பி வர குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் “

“ஏன் குணா அவ்வளவு காலம் லீவில் “?

“பாலா உனக்குத் தெரியும் தானே இரு வருடங்களுக்கு முன் நான் என் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து என் முழங்கால் சில்லு பாதிக்கப் பட்டது என்று. அதனால் நான் கைத்தடி பிடித்து நடக்க வேண்டி இருக்கிறது.

“உன் காலைக் கொண்டு போய் டாக்டரிடம் காட்டினனியா”?

“ அவர் சத்திர சிகிச்சை செய்து சில்லு மாற்ற வேண்டும் என்று சொன்னார். உனவடுனவில் இருக்கும் என் அப்பா ஜெயவர்தனா உடைவு முறிவு கால், கை. முதுகு, கழுத்து பிரச்சனைகளுக்கு மூலிகை வைத்தியம் செய்யும் நாட்டு வைத்தியர். அவர் கேரளாவில் வைத்தியம் கற்றவர். அவர் பலருக்கு முழங்காலில் உள்ள பிரச்சனைக்கு ஆபரேஷன் செய்யாமல் மூலிகைகள் பாவித்து மசாஜ் செய்து குணப் படுத்தி இருக்கிறார். அவரோடு நான் போனில் கதைத்தபோது என்னை மூன்று மாத லீவில் ஊருக்கு வரும் படியும் தான் குணப்படுத்தி விடுவதாகச் சொன்னார்“.

“என்ன ஆபரேஷன் செய்யாமல் மூலிகையில் நாட்டு வைத்தியமா”? அதுவும் உன் உனவட்டுன கிராமத்திலா”?

குணவர்தனா சிரித்தான்.

“ ஏன் குணா சிரிக்கிறாய் “

“ உனக்கு என் கிராமத்தைப் பற்றித் தெரியாது . நீ பிறந்தது வடக்கில் உள்ள பருத்தித்துறை என்ற ஊரில் , நான் பிறந்தது சுமார் 500 கி மீ அப்பால் தெற்கில், காலிக்கு அருகே உள்ள கடலோரக் கிராமத்தில் .அனேகமாக வடக்கில் உள்ளவர்களுக்கு தெற்கில் உள்ள கிராமங்களின் இராவணனோடு தொடர்புள்ள மரபுக் கதைகள் தெரியாது. இராம இராவாண யுத்தத்தின் போது ஒரு சமபவம் எங்கள் கிராமத்தில் நடந்தது”

“என்ன சம்பவம் சொல்லு குணா. நான் இராமாயணம் படிக்கவில்லை “

”என்ன நீ ஒரு இந்துவாக இருந்தும் இராமாயணம் படிக்கவில்லையா பாலா”?

“எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அது இருக்கட்டும், இலங்கையில் தெற்கில் உள்ள சில ஊர்களுக்கும இராமாயணத்துக்கு என்ன தொடர்பு.? அதை முதலில் சொல்லு குணா .”

“எனக்கு என் அப்பா சொன்னதை உனக்கு சொல்லுறன் கேள். இராவணன் வெட்டு என்ற பெயரில் மலையை கத்தியால் இரண்டாக வெட்டிய தோற்றத்தோடு திருகோணமலையில் உள்ள கோணசர் மலையில் ஒரு பகுதி உண்டு. அதே திருகோணமலைக்கு அருகாமையில் உள்ள கிண்ணியா கிராமத்தில் ஏழு சுடுநீர் கிணறுகள் உண்டு. இராவணன். தாயின் ஈமக்கிரிகைகளைச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கததால் திருச் சூலத்தைத் தன் கரத்திணால் நிலத்தில் ஊன்றி நீர் வரவழைத்ததாக கதையுண்டு.
நுவரேலியா என்ற நகருக்கு அப்பெயர் வந்த காரணம் ஹனுமான் அந்த நகருக்கு அருகே இருந்த அசோக வனத்தை எரித்த ஒளியினால் ஏற்பட்டது என்பர். அசோக வனம் நுவரேலியாவுக்கு அருகேயுள்ள ஹக்கல பூங்காவைச் சுற்றியுள்ள பகுதியாகும். அப்பகுதியில் பல அசோகமரங்களுண்டு.
அவ்விடத்தில் சீதை சிறைவைக்கப்பட்டதன் நினைவாக சீதைக்கு கோயில் இன்றுமுண்டு. சீதை பல்லாங்குழி விளையாடியதைக் எடுத்துக்காட்ட ஏழு குழிகள் கோயிலுக்கு அருகே பாதையில் உள்ளது. ஹனுமான் தன பாதம் பதித்த அடையாளமும் உண்டு.

குபேரன் இராவணனின் தந்தையின் ஒரு மனைவியின் மகன். இராவணன் தன் அண்ணன் குபேரனோடு யுத்தம் புரிந்து புஷ்பவிமானத்தை வென்றதாகவும், அது போன்ற தன்னிடம் இருந்த விமானங்களை நிறுத்திவைக்க விமானத்தளங்களை இலங்கையில் பல இடங்களில் இராவணன் தோற்றுவித்ததாக மரபுக் கதைகள் உண்டு. இவ்விமானத்தளங்கள் வாரியப்பொல. மஹியன்கன இடங்களில் இருந்ததாக நம்புகிறார்கள். இதோடு வரக்காப்பொல என்ற இடத்தில் விமானத்தளம் இருந்ததாக கதையுண்டு.
சிங்களத்தில் மஹியன்கனவுக்கு அருகே உள்ள ஊரின் பெயர் வீரகன்தொட்ட. சிங்களத்தில் அதன் அர்த்தம் விமானத்தளம் இறங்கும் இடம் என்பதாகும். இவ்விடத்திலும் இராவணனுக்கு விமானத்தளம் இருந்ததாக கருதுகிறார்கள்.

நுவரேலியாவிலிருந்து பதுளைக்கு போகும் பாதையில். வெலிமட என்ற கிராமம் உண்டு. இக்கிராமத்தில் சீதை தன் தனது கற்பின் மேல் இராமனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைப் போக்க, அக்கினிப் பரீட்சை நடத்தியதாகச் சொல்வார்கள்.

வேலிமடவில் இருந்து 22 கிமீ தூரத்தில் உள்ள நகரம் பண்டாரவளை. இந்த நகரத்தில் இருந்து தெற்கே வெள்ளவாய நோக்கிப் போகும் பாதையில் 13 கிமீ தூரத்தில் “எல்ல” என்ற கிராமமுண்டு. இக்கிராமத்தில் 1080 அடி உயரமுள்ள நீர்வீழச்சியுண்டு. இதன் நீரில் சீதை குளித்தாகவும், நீர்வீழச்சிக்குப் மேலே உள்ள குகையில் இராவணன் வாழந்ததாகவும் மரபு வழி வந்த கதைகள் பல உண்டு.

சிலாபத்திலிருநது குருணாகலுக்குப் போகும் பாதையில் 5 கி.மீ தூரத்தில் பிரசித்தம் பெற்ற முன்னேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலையும்; சிவபக்தனான இரவணனையும் இணைத்து மரபு வழிக் கதையுண்டு.

சீதாகொட்டுவ என்ற இடத்தில் சீதையை இராவணன் சிறைவைத்ததினால் அவ்வூருக்கு அப்பெயர் வந்தது என்பது சிங்களவர் எண்ணம். ஆரம்பத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் அரண்மனையின் அந்தப்புரத்தில் சீதை சிறைவைக்கப்பட்டு, அதன் பின் சீதாகொட்டுவ என்ற இடத்துக்கு மாற்றியதாக மக்கள் நம்பிக்கை. ஒரு காலத்தில இவ்விடத்தில் லங்காபுரி நகர் இருந்ததெனவும், நீர்வீழ்ச்சியும், பூந்தோட்டங்களும், சிற்றாறுகளும் நிறைந்த இடத்தில் மண்டோதரியின் அரண்மணை இருந்ததாக நம்புகிறார்கள். இவ்விடம் மகியன்கனவில் இருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது. அவ்வூருக்கு அருகே “குருலுபொத்த” என்ற இடத்தில் இராவணின் புஷ்பவிமானம் திருத்தும் இடமாக இருந்தது. விமானம் என்றால் சிங்களத்தில் பறக்கும் மயிலைக் குறிக்கும். இராவணனின் விமானம் பெரிய மயில் போன்ற தோற்றமுள்ளது. குருலுபொத்த என்றால் பறவையின் பகுதியெனப்படும்.

அக்காலத்தில் மன்னர்கள் தப்பி ஓடுவதற்கு சுரங்கங்கள் அமைத்தனர். பல தமிழ் சினிமா ராஜா-ராணி படங்களில் கதையில் எதிரியிடம் இருந்து தப்பி ஓடுவதற்கு சுரங்கங்கள் பாவிக்கப் படுவதைக் காட்டியுள்ளார்கள். இராவணன் பல சுரங்கங்களை தன் ஆட்சி காலத்தில் ஸ்தாபித்திருந்தான். இச்சுரங்கங்கள் முக்கியமான நகரங்களையும். விமானத்தளங்களையும், பண்ணைகளையும் இணைத்திருந்தன. இசச்சுரங்கங்களின் வாய்கள் பண்டாரவளையில் உள்ள இராவணன் குகைவாசல்கள், சேனாபிட்டிய, ரம்பொட, லகோகெல, வாரியப்பொல, சீதாகொடுவ, ஹசலக, ஆகிய இடங்களில’ இருந்ததாக மக்கள் நம்புகிறார்கள்.
மனிகட்டுதர் என்ற இடத்தில் உள்ள லபுகல தெயிலைத் தொட்டத்தில் ஹனுமான் சீதையைக கண்டதாகவும், ஹனுமான் அச்செய்தியை இராமனுக்கு அறிவித்தபின் அக்குகையில் ஓய்வு பெற்றான் என்ற கதையுண்டு. இக்குகைமேல் இன்று இராமர், இலட்சுமணன், சீதை, ஹனுமான் ஆகியோருக்கு கோயில் ஒன்று உண்டு. லபுகல கண்டி நுவரேலியா A5 பாதையில், நுவரேலியாவில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள ஊராகும்.

“அது சரி உன் உனவடுன ஊருக்கும் இராம இராவண யுத்தத்துக்கும் என்ன தொடர்பு? அதை முதலில் சொல் .”

“இலங்கையில் நடந்த இராம இராவண யுத்தத்தில் போரிட்டு இலட்சுமணன் காயமுற்றான்.. காயங்களுடன் கிடந்த இலட்சுமணனைக் காப்பாற்ற மூலிகைகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரவேண்டியிருந்தது. ஹனுமான் இந்தியாவின் வடக்கு திசையில்; உள்ள சஞ்சீவிமலையில் இருந்து மூலிகைகள எடுத்து வரப் பறந்து சென்றான். மூலிகைகள் நிறைந்த சஞ்சீவிமலை முழுவதையும் கொண்ட வர அவனால் முடியாததால் மலையின் ஒரு பகுதியைப் பெயர்ந்து எடுத்து மூலிகைகளோடு இலங்கை நோக்கி பறந்து வந்ததாகவும், பறக்கும் போது தள்ளாடிய நிலையில் பறந்ததாகவும், அப்போது கையில் சுமந்து சென்ற மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையின் சிறு பகுதிகள் இலங்கையில் பல இடங்களில் விழுந்ததாக மரபு வழிக் கதைகளுண்டு. அவ்வாறு சஞ்சீவி மலையின் பகுதிகள் விழுந்த இடங்கள், யாழ்ப்பாணத்துக்கு அருகேயுள்ள கச்சைத்தீவு, மன்னனாருக்கு அருகேயுள்ள தல்லாடி. காலி நகருக்கு தென் கிழகில் 5 கிமீ தூரத்தில் கடலோர என் ஊரான உனவட்டுன, குருநாகலுக்கு வடக்கே 20 கிமீ தூரத்தில் உள்ள ஹிரிபிட்டிய ஊரில் உள்ள தொலுகந்த என்ற குன்று உள்ள இடங்களை குறிப்பிடலாம். இவ்விடங்களை வைத்து. ஹனுமான் இமயமலையில் இருந்து லட்சுமனின் மயக்கத்தை போக்கத் தேவையான மூலிகை எது என்று தெரியாமல் மூலிகைகள் இருந்த மழையின் ஒரு பகுதியை பெயர்த்து எடுத்து கையில் தூக்கிக்கொண்டு பறந்து இலங்கைக்கு வரும் பொது கலைப்பால் தள்ளாடிய படியால் மன்னாரில் உள்ள தள்ளாடி கிராமத்தில் சுமந்து வந்த மலையின் ஒரு பகுதி மூலிகையோடு விழுந்தது திரும்பவும் அவன் தொடர்ந்து பரக்கும் பொது களைப்பால் தள்ளாடிய போது, இன்னொரு பகுதி என் கிராமத்தில் விழுந்தது. அதனால் என் கிரமத்தில் கடற்காரைக்கு வெகு அருகே ஒரே மூலிகை மரங்கள் உள்ள காடு .அதை பீச் ஜங்கில் என்று இன்றும் அழைப்பர். அதை பார்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள் சிலர் என் தந்தையிடம் தம் வியாதிகளுக்கு மூலிகை வைத்தியம் செய்து , சுகம் பெற்று சென்றுள்ளார்கள் . பாதை தெரியாமல், மூலிகைகள் உள்ள மலையோடு பறந்து பாதையை நீயே; ஊகித்துக் கொள்ளலாம்.
மன்னாருக்கு அருகேயுள்ள தல்லாடி என்ற ஊர் பெயர் ஹனுமான் தல்லாடி கொணடு கையில எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையில் இருந்து ஒரு சிறு பகுதியை அவ்விடத்தில் விழுத்தியதால் அவ்விடத்துக்கு அப்பெயர் வந்தது என்ற விளக்கமுண்டு. அதே போல இன்னொனொரு பகுதி ஊனவட்டுன என்ற ஊரிpல் விழுந்தது. அதன் அர்த்தம் சிங்களத்தில் “அதோ விழுந்துவிட்டது” என்பதாகும். இவ்விடங்களில் பல வகை மூலிகைகள் இருப்பதினால் இம்மரபு வழிக்கதைகள் தோன்றியிருக்கலாம்.

“ குணா நீ சொல்வதை கேட்க எனக்கு அதிசயமாக இருக்கு”

“இன்னொரு அதிசயம் பிரபல சயின்ஸ் நாவல்கள் எழுதிய காலம் சென்ற ஆர்தர் சி கிளார்க்(Arthur C Clark) விரும்பி தெரிந்து எடுத்து வாழ்ந்த கிராமம் நான் பிறந்த உனவட்டுன கிராமம்” குணவர்தனே பெருமையாகச சொன்னான

“கொழும்பில் இருக்காமல் ஏன் அந்த கிராமத்தை தேர்ந்து எடுத்தார்”?

“அவர் இயற்கை வளத்தை விரும்புவர். அதோடு கடலில் மூழ்கி ஸ்கூபா விளையாடுபவர் . அக் கிராமக் கடல் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங் போன்ற சில நீர் விளையாட்டுகளை அனுபவிக்கவும் முடியும்.
அவரின் கூற்று படி எனது ஊர் உலகளவில் மிக உயர்ந்த குறிப்பிட்ட ஈர்ப்பைக் ( specific gravity) கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிங்களத்தில் அதோ விழுந்து விட்டது என்ற சொற்தொடரான “ஒன்ன வடுனா” மருவி உனவட்டுன என இலங்கையின் தெற்குப்பகுதியில் வாழும் சிங்களவர்கள் பெயர் சூட்டி இருக்கிறார்கள். தமிழர்களை போல் சிங்களவர்கள் ஐதீக கதைகளில் நம்பிக்கை உள்வர்கள. அதனால் தாம் பௌத்தர்கலானாலும் முருகன், கண்ணகி அம்மன், விஷ்ணு , பிள்ளையார் அய்யனார், ஹனுமான் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் .

“வேறு என்ன உனவடுனவில் உண்டு குணா”? :

“ அங்கு யடகலா ராஜா மகா விஹாராயில் ஆசீர்வாதங்களை எடுத்துக் கொள்ளலாம்.அங்கு உங்களுக்கு ஒரு ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை மற்றும் ஸ்நோர்கெலிங் வசதிகளும் உண்டு. இந்த கடற்கரை ஆமைக் கூடுகளுக்கு புகழ்பெற்றது அதை விட ஹனுமானுக்கு கோவிலும் உண்டு:

“ அப்ப எப்ப போவகாக உத்தேசம்"?

"வருகிற வெளிகிலமாயி மனவியோடு போறான்:

"உனது பயணம் வெற்றிகரமாக் முடிய என் வாழ்த்துக்கள். என்னோடு"தொடர்பில் இரு. திரும்பி வரமுன் எனக்கு அறிவி. நான் ஏயர்போர்ட்டுகுக் கார் கொண்டு வருகிறேன்”

****

மாதங்கள் சென்றது பாலாவுக்குதெரிய வில்லை . ஒரு நாள் குணாவிடம் இருந்து தனக்கு கு வைத்தியம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக போனில் சொன்னான் . ஒரு கிழமையில் கனடா திடரும்புவதாகச் சொன்னான்.

குணாவையும் அவன் மனவியையும் கூட்டி வர பாலா விமான நிலயத்துக்குச் சென்றான் . குணா கைத்தடி உதவி இன்றி நடந்து வருவதைக் கண்டு பாலா ஆச்சரியப்பட்டான்.
“குணா, பெரிய ஆப்பரேஷன் ஏதும் செய்யாமல் உன் முழங்கால் பிரச்சனை தீர்ந்து விட்டது. உன் அப்பாவுக்கு எனது வாழ்த்துக்கள்”:

“எல்லாம் நம்பிக்கை பலா. உன் நன்றி ஹனமானுக்குப் போக வேண்டும் . அந்த சஞ்சீவி மலையில் இருந்து உனவடுனவில் விழுந்த மூலிகைகளை என் அப்பா என் வைத்தியத்துக்குப் பாவித்தார் அவர் வீட்டில் மூலிகைத் தோட்டம் உண்டு” என்றான் குணா,

“ அதுசரி ஹனுமானின் கோவிலுக்குப் போனாயா “?

“ போகாமலா ? அவருக்குப் பூசை செய்து கோவிலுக்கு காணிக்கை கொடுத்து வந்தேன். அவர் செய்த உதவியை நான் மறக்க முடியாது அல்லவா “?, குணா சொன்னான்
****

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (25-Oct-18, 5:04 pm)
பார்வை : 165

மேலே