எனக்கும் தான் மிட்டூ Metoo

எனக்கும் தான் 'மிட்டூ' Metoo

இது ஆண்களுக்கு
கன்னியர்கள் வைக்கின்ற
கன்னிவெடி.
நம்பி வந்த
பெண்ணிற்கு
கொடுக்க கூடாததை
கொடுத்த ஆணுக்கு
காலம் கடந்து
காலதாமதமானாலும்
கன்னத்தில் அறைகின்ற
இடித்துரைக்கும் முறை.

ஆண் இனத்தை
அடி தடுமாறி
எல்லை மீறும்
ஆண் இனத்தை
அடித்துரைக்கும்
அவமான சின்னம்.

தன்னுள் மட்டும்
தான் செய்த சங்கடத்தை
என்றென்றும் புதைத்திருந்த
எச்சத்தை
எடுத்துரைக்க
இவானா செய்தான்
இல்லை இல்லை
எவனோ செய்தான்.

நாமும் அவ்வாறு
நம்மை நம்பி வந்த அந்த
நங்கைக்கு
நல்லதை செய்வதாய்
நன்றாக சொல்லி
இதைத்தான் செய்தோமோ
என்றே
சுய பரிசோதனைக்கு
சுய சிந்தனையோடு
குற்ற உணர்வேடு
குனிந்தது தன்னுள்
தானே உள் நோக்கிட வைக்கும்
ஒரு நியாயமான தண்டனை.

எழுதியவர் : இராமானுஜம் மேகநாதன் (26-Oct-18, 9:51 am)
பார்வை : 171

மேலே