வித்தியாச விடியல்
கதிரவன் உதித்தான்
காலையில் மேற்கே
சேவல்கள் பிளிறின
நாய்கள் கூவின
நரிகள் கனைத்தன
குதிரைகள் குரைத்தன
குரங்குகள் அகவின
கடலலை அசையாமல் குவிந்தது
கதிரவனை நோக்கி மலை போல
விளங்கவில்லை மனிதனுக்கு
வித்தியாச விடியலின் காரணம்
ஆலமரம் பேசியது
ஆகாயத்தை பார்
என் விழுதுகளும் மேல் நோக்கி
எங்களை மாசுபடுத்தும்
எதிரியான உங்களுக்கு கற்பிக்க
அஹிம்சை வழியிலான
அடையாளப் போராட்டம் இன்று