பிஞ்சு மனங்கள் சிறு கட்டுரை

சிறுவயதில் இருந்தே ஆண் பெண் பிள்ளைகள்
கலந்து கல்விகற்பது இக்கால கட்டத்தில் ஏற்படும் சீர்கேட்டிற்கு முன்கூட்டியே வழிவகுக்கிறது
அந்த முறை மாறி விட்டால் நிச்சயம் இருபாலரும் கட்டுக் கோப்புடன் வாழ வழி வகுக்கும்
அவர்கள் வளர்ந்து வரும் காலங்களில் தத்தமக்குரிய நன்னெறி கண்டு
ஒழுக்கமான அச்சமற்ற பித்தலாட்டமற்ற தூய எண்ணத்துடன்
வாழ வளமான வழி அமையும்
அவரவர் படித்து பட்டம் பதவி பெற்று
உலகம் போற்ற உத்தமர்களாயும் உன்னதமானவர்களாயும் கண்டு நாம் வியப்படைய கூடும்
பிஞ்சு மனங்களில் கலப்பு என்ற ஆரம்ப கட்டத்தை அவர்கள் தொட்டுவிட்டால் அதை பற்றிய புரிதலோ பயமோ இன்றி
தப்போ தவறோ தெரியாமல் துணிச்சல் அசட்டுத் தைரியம் முரட்டு சுபாவம்
எல்லாம் கூட்டு சேர்ந்து பொன்னான பிள்ளைகளை நாசமாக்கி குட்டி சுவராக்கி விடும்
. பிள்ளைகளை குறை சொல்லி பயன் இல்லை . குழந்தைகள் என்றும் தூயவர்களே .
வளர்ந்து வரும் செல்வங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் மாறிவிடாது
பாதுகாக்க வேண்டியது நமது கடமை, நாட்டின் பொறுப்பு.

எழுதியவர் : பாத்திமாமலர் (26-Oct-18, 3:12 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 210

மேலே