பாண்டு வரைந்த மடல் 📩
சீரகச்சம்பா அரிசி குத்தி எடு /
சிதறாமல் சேதமின்றி சாதம் செய்திடு/
விடக்கோழி விரட்டிப் பிடித்து பிரட்டிடு /
வெண்டக்காய் வதக்கிடு /
ஆற்று நண்டு வறுத்தெடு /
குளத்து மீன் பொரித்திடு /
கிள்ளிய கீரையை கடைந்திடு /
வெட்டிய காயை அவித்திடு /
புடுங்கிய கிழங்கை சுட்டெடு /
காரக் குழம்பு வைத்திடு /
அதிலே கருவாடு போட்டிடு /
அப்பளமும் வைத்திடு /
மோர்மிளகாய் சேர்த்திடு /
பறித்த கனிகளை நறுக்கிடு /
சாத்துக்குடி பழம் தோலை உரித்திடு /
அதனோடு பனிக்கட்டி சேர்த்திடு /
இனிப்பையும் இணைத்திடு /
கணக்கப்பிள்ளை கையிலே கொடுத்திடு/
சரக்குப் போத்தலை உள்ளே தினித்திடு/
பீடி பையையும் வைத்திடு /
கொட்டப் பாக்கு கொழுந்து
வெத்தைலை சுண்ணாம்போடு /
ஏலக்காய் போட்டு மடித்திடு /
தோட்டத்து மல்லிகை எடுத்திடு/
முற்றத்து வாழைநார் வெட்டிடு/
பூக்களை சரமாய் முடித்திடு /
உன் கரும் கூந்தலில் சூடிடு/
கஞ்சியிட்ட காஞ்சுப் பட்டு உடுத்திடு/
மஞ்சள் போட்டு பொட்டு வைத்திடு /
அம்சமாய் காட்சி கொடுத்திடு /
அடுத்த ஊரில் நண்பன் வீடு/
அவனின் தங்கைக்குத் திருமணமாம் /
நமக்கும் குடும்பத்தோடு /
வரும் படி அழைப்பு உண்டு /
விபரமாய் மடலைப் படித்து அறிந்திடு /
புறியாத வரிகளை மீண்டும் படித்திடு/
இப்படிக்கு உன் கணவன் #பாண்டு /