பயணத்தின் பாதை

லட்சத்தில் ஒருவனாய் இரா
லட்சியத்தின் உருவமாய் உலா ..

தோட்டத்து தொட்டி செடியாய் நின்றிடா
ஆகாயம் தொடும் ஆளுமையுடன் ஆர்ப்பரி..

வண்ணம் கண்டு மயங்கிடா
எண்ணம் கொண்டு எழுந்திடு...

கேளிக்கைகளில் தொலைந்திடா
கேள்விக்கணைகளை தொடுத்திடு ...

சந்தர்ப்பங்களை நிர்பந்திக்காது
சூழ்நிலைகளை சூதுகவ்வு ...

சாஸ்திரங்களை சமயப்படுத்தாது
சூத்திரங்களை சமைத்து பழகு ...

தடம் தேடி தொலையாது
தடயம் பதித்து தொடர்ந்திடு ...

பல தூரம் செல்
புது பயணம் செய்
நிஜக் காற்று வாங்கு
இயற்கையை துணை கொள்
தெரியாத தேசம் செல்
புரியாத பாடம் படி...

விதியின் மடியில் உறங்காது
மதியின் மேடையில் முழங்கு ..
எழுந்திடு
துணிந்திடு
போரிடு
வென்றிடு ..
மீண்டும் தயாராகு..

வாழ்கை செல்லும் வழி செல்லாமல்
உன் வழியில் வாழ்க்கையை செலுத்து ..

எழுதியவர் : குணா (28-Oct-18, 7:17 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 423

மேலே