பறையன் மகன் படித்தவன்

முன்னுரை
சாதிப் பிரச்சனையைத் தூண்டி, குளிர் காய்வதே பார்ப்பாணியன் தந்திரம். ஒல்லாந்தர் ஆட்சியின்போது 1697 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அறிக்கையொன்று யாழ்ப்பாணக் குடிகளிடையே 40 சாதிப்பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பது. ஒவ்வோருக்கு சாதிக்கும் ஒரு குலத் தொழிளுண்டு. இது போரினால் வெகுவாக மாற்றம் அடைந்துள்ளது மேல் வர்க்கத்தால் ஒடுகிவைக்கப்பட குறைந்த சாதி இளைஞர்கள் யுவதிகள், பலர் விடுதலைப் புலிகளில் சேர்ந்து, ஈழத் தமிழரின் உரிமைக்கு தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து போராடி மாவீரர்களானார்கள். வசதி உள்ள உயர் சாதியினர் தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி போரில் ஈடுபடாமல் அவர்களின் உயரை காப்பாற்றினார்கள். குப்பைக்குள்ளும் முத்து என்பது போல், ஒருவன் தோன்றி சாதனை படைத்தான் என்பதைக் கருவாக வைத்து எழுதியதே இச் சிறு கதை

****

“என்ன கிளாக்கர் கந்தையா யோசித்துக் கொண்டு இருக்குறீர் எதாவ்து குடும்பத்தில் சண்டையா” ? கந்தையரின் நண்பர் சுப்பையா கேட்டார்

“அப்படி குடும்பத்தில் ஒரு பிரச்சனையும் இல்லை. பிரச்சனை நான் வேலை செய்யும் அலுவலகத்துக்கு புதிதாக பரிபாலன சேவையில் தேர்வாகி மார்க்கண்டு என்று ஒருவன் வந்திருக்கிறார் அவனால் தான் பிரச்சனை . .அலுவலகத்தில் அவரை த் தவிர மற்றைய ஆறு பெரும் உயர் சாதியினர். அதில் ஒருவர் பிராமணர் . மார்க்கண்டு சரியான கண்டிப்பான பேர்வழி. எதிலும் பிழை கண்டுபிடிப்பார் பல்கலை கழகத்தில் கணிதத்தில் முதல் நிலையில் பட்டம் பெற்றவராம்.இலங்கை பரிபாலன சேவை பரீசையில் அதிக புள்ளிகள் எடுத்து முதலாவதாக வந்தவராம்” :

”யார் கந்தையா உமக்கு இதெல்லாம் சொன்னது.”?

“என் அலுவலகத்தில் பிரதம லிகிதராக வேலை செய்யும் திருநெல்வேலி சிவன் கோவிலின் காலம் சென்ற பிரதம குருக்கள் சிவ சர்மா ஐயரின் பேரன் பரமேஸ்வர சர்மா என்பவர் தான். மார்க்கண்டு எங்கள் அலுவலகத்துக்கு அதிகாரியாக வரமுன் சர்மா அவரைப் பற்றி விசாரித்து இருக்கிறார்.
யார் என்ன சாதி, எந்த ஊரு, என்ன படிப்பு என்று அறிந்து வைப்பதில் சர்மா நிபுணர். மார்க்கண்டும் நல்லூர் பகுதியாம் பரிபாலான சேவை பரீட்சையில் முதலாவதாக வந்த படியால் அவர் கேட்டபடி அவர் பிறந்த பகுதிக்கு முதல் நான்கு வருடங்கள் நல்லூர் மாவட்ட செயலாளராக அரசு அனுப்பியுள்ளது. அதோடு அவருக்கும் சிங்கள சாதிக்கும் தொடர்பு இருப்பதாகவும் சர்மா சொல்லிக் கேள்விப் பட்டனான் ”.

“அது சரி நல்லூரில் அவர் எந்த இடமாம் . எனக்கு தெரியாதவர்கள் நல்லூரில் இல்லை கந்தையர்”.

“அவர் பிறந்தது நல்லூர் அரசவேளியிலாம்.”

“ கொஞ்சம் விளக்கமாய் தான் சொல்லுமேன் “

“ நல்லூரில் உள்ள அரசவேளியில் வாழந்த மார்கண்டுவின் தகப்பன் பெயர் முத்ததையன் அவரின் பாட்டன் பெயர் செல்லன் , அவரின் பூட்டன் சின்னன் ,ஓட்டன் முத்தன்.
மார்கண்டுவின் சாதியின் குடுமபத் தொழில பறை அடிப்பது. ஒரு காலத்தில் அவரின் பம்பரை ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்து மன்னருக்கு பறை அடித்து மக்களுக்கு செய்திகள் சொன்ன சாதி அவர்கள் அதோடு மரண, திருமண வீடுகளிலும் பறை அடிதவர்களாம்”, கந்தையர் சொன்னார்

“இப்ப விளங்குது அவர் நந்தனாரின் சாதி என்று சொல்லுமன்:”

“நீரே ஊகித்துக் கொள்ளும். ஒரு காலத்தில் நல்லூர் பகுதியில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வீதியிருந்ததென்பது தெரிகிறது. அந்தணர்க்குகொரு தெருவும், செட்டிகளுக்கொரு தெருவும், வேளாளர்க்கொரு தெருவும், கன்னாருக்கொரு தெருவும், தட்டாருக்கொரு தெருவும், கைக்கோளர்க்கொரு தெருவும், சாயக்காரருக்கொரு தெருவும், உப்புவாணிகருக்கொரு தெருவும், சிவிகையார்க்கொரு தெருவுமாக இப்படி அறுபத்துநான்கு தெருக்களிருந்தன.

“ஏன் இப்பவும் தட்டார் தெரு . சிவியார் தெரு, செட்டித்தெரு, பறங்கித் தெரு, சோனகத் தெரு, கன்னாதிட்டி , ஆரிய குளம, பண்டாரக் குளம், கொல்லன் கலட்டி. தச்சன் தோப்பு என்று பெயர்களுண்டு. இவை மாற்றப் படவேண்டும்”.

“அது மட்டுமே இந்நகரத்தினுள்ளே அம்பட்டர், வண்ணார், பள்ளர், நளவர், பறையர், துரும்பர் முதலியோர்க்கு இருக்கையில்லை. அவரெல்லாம் புறஞ்சேரிகளிலேயே வசித்தார்கள். பறையர் முதலானோர். கட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள், நில உடைமையாளரான வெள்ளாளரின் கீழ் அவர்களுக்குச் சேவகம் செய்து வாழுகின்ற ஒரு நிலை இருந்தது. வெள்ளாளரின் மரண வீடுகளில் பறையடிப்பது அவர்களின் குடி உரிமை. இறந்தவர்களின் நெருங்கிய சொந்தக்காரர் இழவு வீட்டுக்கு வரும்போது அடையாளம் கண்டு வெகு வேகத்தோடு பறை அடிப்பார்கள் . இழவு வீட்டில் இருந்து பிரேதம் சுடலைக்குப் போகும் மட்டும் அவர்கள் பறை அடித்த படியே பிரேதத்துக்கு முன் செல்வார்கள். . இறுதியில் இழவு வீட்டுக்காரர் அவர்களுக்கு சன்மானம் வழங்குவார்கள் . பகுதிக்கு பறை அடிக்கும் கூட்டம் இருக்கும். அவர்கள் வேறு பகுதிக்கு சென்று பறை அடிக்க மறுத்து விடுவார்கள். அதுசரி ஒரு புத்தகத்தில் வாசித்தேன் பறையர்கள் என்ற சொல் கேரளாவில் இருந்து வந்தது என்றும், யாழ்ப்பாணத்துக்கும் கேரளாவுக்கும் நெருங்கிய தொடர்பு மோனே . உணவில். கலாச்காரதில் என்று எம் டி ராகவன் என்பவரின் நூலில் வாசித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. அதோடு யாழ்பாணத்தில் உயர்சாதியினராக கருதப்படும் வெள்ளாளர், ஒரு வட்டத்துக்குள் போலிக் கௌரவம். சாதி அபிமானம், பழமைவாதத்தொடு பெருமை பேசி வாழ்பவர்கள்”
.
“அது உண்மை. :பறை” என்பது சொல் என்பதாகும் கேரளாத்தில் பறை என்றால் பேசு . என்பதாகும் ஒருகாலத்தில் பறை அடித்து செய்தி மக்களுக்கு சொன்னார்கள். இப்பொது தான் தொலை பேசி , அலை பேசி, மின்அஞ்சல் வந்து வட்டதே”:

“அதி சரி கந்தையர் மார்கண்டு எப்படி படித்து முன்னுக்கு வந்தவர் ” .

"அவர் படித் பாடசாலையில் அவரி ன் திறமையைக் கண்ட ஒரு சிங்கள ஆசிரியர், அவர் கீழ் சாதியைச் சேந்தவர் என்று அறிந்து, அவரை ஒரு பெளத்த பிக்குவுக்கு அறிமுகப் படுத்தினார். ஒரு காலத்தில் தலித் சாதி மக்கள் இந்து மதத்தில் இருந்து பெளத்த மதத்துக்கு புத்தூர் கிரமத்தில் மதம் மாறினார்கள் அவர்களுக்கு இலவச கல்வி கற்கும் வசதி அரசு செய்து கொடுத்தது. மார்கண்டு புத்தூருக்கு புலம் பெயர்ந்து அங்குள்ள புத்தபிக்கு ஒருவரின் உதவியோடு படித்து பல்கலைகழகம் சென்று, அறிவியல் துறையில் முதலாம் வகுப்பில் சித்தி பெற்றார் . மார்கண்டு காதலித்து திருமணம் செய்தது பல்கலைகழகதில் அவனோடு படித்த சிங்களப் பெண் மல்லிகாவை அவள் காலி நகரைச் சேர்ந்த ஒரு மீன்வியாபாரி முதலாளி ஒருவரின் ஒரே மகள் “

“மச்சான், இது ஒரு நாவலுக்கு ஏற்ற கருவாக இருக்கிறது:”

“மார்கண்டுவுக்கு சிங்களத் தொடர்பு இருப்பதால் வெகு விரைவில் பதவி உயர்வு பெற்று ஒரு அமைச்சுக்கு நிறந்தர செயலாளராக வரக் கூடிய வாய்ப்புண்டு” :

“கந்தையர் இந்த விபரங்களை எனக்குத் தந்ததுக்கு நன்றி மார்க்கண்டு பறையர் சாதி என்றாலும் அவரோடு ஒத்துழைத்து வேலை செய்ய வேண்டிய நிலைக்கு சர்மாவும் நாங்களும் தள்ளப்பட்டுள்ளோம் . . ஏன் வெள்ளாளச் சாதியைச் சேர்ந்த எங்கள் ஆபீஸ் பியோன் கட அவரை சேர் போட்டு கூப்பிடுவான். "
.
"யார் கண்டது ஒரு வேளை சர்மா மாறுதல் கேட்டு வாங்கி வேறு பகுதிக்குப் பிரதம லிகிதராகப் போகலாம்;’ கந்தையரின் நண்பர் சொன்னார்.

****

அன்று , ஒரு கடிதம், கொழும்பு பிரதம மந்திரியின் அமைச்சில் இருந்து சிங்களத்தில் மட்டுமே வந்திருந்தது அந்த கடி த்தில் தமிழில் மொழி பெயர்ப்பு இருக்கவில்லை.பிரதம லிகிதர் சர்மாவுக்கும் மற்றும் அலுவகத்தில் இருப்ப வர்களுக்குச் சிங்களம் வாசிக்கத் தெரியாது. தங்கள் அதிகாரி மார்கண்டுவிடம் கொண்டு போய் கடிதத்தைகொடுத்து அதில் சிங்களத்தில் எழுதி இருபது புரியவில்லை என்றார் சர்மா. மார்க்கண்டு அதை வாங்கி வாசித்து விட்டு கடிதத்தை தமிழில் மொழி பெயர்த்து சொன்னார். எல்லோரும் வாயடைத்துப் போய் நின்றார்கள் கந்தையருக்கு தன் நண்பர் சின்னையர் சொன்னது உ ண்மை என்று புரிந்தது. அதோடு அதிகாரி மார்க்கண்டுவின் மேசையில் அவரின் மனவி மல்லிகா கண்டிய உடையோடு மார்க்கண்டோடு சேர்ந்து எடுத்த படம் காட்சி கொடுத்து

கந்தையர் மனதுக்குள் நினைத்தார் படித்தவனுக்கு எங்கு போனாலும் சிறப்பு என்பது உண்மையே. படித்தவனுக்கு சாதி என்ன, மதம் என்ன, இனம் என்ன . எல்லாம் ஒன்றே தலித் இனத்தில் பிறந்து, .படித்து, பல பட்டங்கள் பெற்று தலித் இனமக்களுக்கு போராடிய பெரியார் அம்பெத்கார் அவர் நினைவுக்கு வந்தார் .

****

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (30-Oct-18, 8:33 am)
பார்வை : 236

மேலே