காதலுடன் காமம்
நாவிதழ்கள் சேர்ந்து
உருவாகும் ஈர முத்தம்!!!
ஆடைகள் களைந்து நிற்கும்
இருவரின் வெட்கம்!!!
விரல் தீண்ட உருவாகும் வெப்பம்
விழிகள் நான்கும் சொக்கி நிற்கும்..
பற்றி கொண்டது நெருப்பும்,
பஞ்சும்..
இனி கொஞ்சல்களுக்கு இல்லை
பஞ்சம்..
தேகங்கள் கட்டிக் கொண்டு
கட்டில் மேல் நடக்கும் காதல் யுத்தம்!!
அறைகள் முழுவதும்
ஆனந்தத்தின் சத்தம்!!
ஆசை வந்து காதினுள் கத்தும்..
மேனி முழுவதும் இதழ்கள் சுத்தும்..
பெண்மை துடிக்கும்..
ஆண்மை வெடிக்கும்..
வியர்வை மழையாய் பொழியும்..
இரு உயிர்கள் உருகி வழியும்..
நம் நாணம்
இங்கு தோற்றுப் போகும்!!!
நம் காமம்
இங்கு ஜெயித்துப் போகும்!!!
தீராத காதல் தீயாக மோதும்..
பகலொன்று வேண்டாம்
இரவொன்று போதும்..
உன்னுள் நானும்,
என்னுள் நீயும்,
தொலைந்து போவோம்;
எல்லா காதல்களுக்கு பின்
ஒரு சிறு காமம் ஒளிந்து கொண்டு
தான் இருக்கும்..
காதல் இல்லா வாழ்க்கை இல்லை!!!
காமம் இல்லா காதல் இல்லை.!!!
கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤