பெண்ணே என் காதல் ஆசை
![](https://eluthu.com/images/loading.gif)
உன் மோதிர விரலில் மோதிரமாக மூடிக்கொண்டு உன்னை முத்தமிட ஆசை....
உன் கைக்கடிகாரம் ஆக நான் மாறி உன்னை கட்டிக் கொள்ள ஆசை...
உன் வளையல் ஆக உன் கைகளில் வழுக்கி விளையாட ஆசை.... .
உன் சேலைக்குள் ஒரு நூலாக இருந்து கொண்டு தேகத்தை சுற்றிக்கொள்ள ஆசை......
ஒட்டியாணமாக உன் இடையை இருக்கி வளைத்து கொடியாக படர ஆசை....
நெற்றி பொட்டாக ஒட்டிக்கொண்டிருக்க ஆசை...
உன் வெள்ளி கொலுசில் வரும் இசையாக உன்னுடன் இணைந்திருக்க ஆசை...
உன் உடலின் உயிரின் உள்ளே உதிரமாய் உன்னுள்ளே நுழைந்துவிட ஆசை ஆசை....
நுழைந்து நுழைந்து நினைந்து விட ஆசை....
உன்னுள்ளே கலந்துவிட ஆசை ....
காணாமல் போக ஆசை ஆசை....