உள்ள வறட்சியே உலக வறட்சி

தினமும் மணிக்கணக்கா காத்திருந்து குடம் குடமா தண்ணீர் பிடித்து கொண்டு வந்து ஊற்றி வளர்த்தேன் புளியமரமொன்று.
கொப்பாக கொப்பாக புளியமரமும் வளர்ந்து பொறுப்பில்லா ஆட்டுக்கூட்டம் இலைகளையெல்லாம் தின்று தீர்த்துவிட்டதே!

மீண்டும் தண்ணீர் குடம் குடமா ஊற்றி கொஞ்சமாய் தழைக்கையிலே மாட்டுக்கூட்டம் வந்து ஒன்றுவிடாமல் தீர்த்துவிட்டதே!

மீண்டும் தண்ணீர் ஊற்றி வளர்க்க, மரம் சுற்றிலும் முட்களைக் கொண்டு வேலி அமைத்தேன்,
புளிய மரக் கன்றிற்கு ஊற்றிய நீரெல்லாம் முட்களுக்கும் பாய, புளியமரக்கன்றைவிட முட்களே செழித்து வளர காண்கிறேன்.

புளிதரும் புளியமரம்,
பாதுகாவலாய் முட்கள்,
வளர்ந்து காய்க்கும் முன்னே பல காலம் கடந்துவிட்டது.
இன்னும் மரம் காய்க்கவும் இல்லை,
குடம் குடமாக காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலையும் மாறவில்லை.

தண்ணீர் தொட்டிகள் காய்ந்து கிடக்கின்றன.
மழை பெய்தால் மழைநீரே குடிநீராகும்.
குளத்து நீரே குடிநீர் கிணற்றில் பெருகும்.
அடிகுழாய் இருந்த இடம் நீர்தேக்கிகளாக மாறிவிட்டன.
தண்ணீருக்குத் தான் பற்றாக்குறை, வீட்டுக்குள்ளே ஆழ்துளைக் கிணறு பெருகியதாலே.
உள்ள வறட்சியால் உலகம் வறட்சியில் வாடிக்கிடக்கிறது..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (31-Oct-18, 9:27 pm)
பார்வை : 4293

மேலே