நான் ஒரு நத்தை

திரளும் காதலைச்
சொல்ல வக்கற்று
மூட்டையாய் முடிச்சுப்போட்டு
முதுகிலே ஏற்றிக்கொண்டு

பிரசவிக்கும்
ஒவ்வொரு கணத்தையும்
கொன்றுக் குவிக்கின்றேன்.

கொட்டும் மழையாய்
அழுதுத் தீர்க்கின்றேன்.

யாரும் தீண்டின்
உள்வாங்கும் உடம்பிது
தீ வந்துத் தழுவிடினும்
சுரணைகெட்டுச் சிரிக்கின்றேன்.

உன் நினைவுகள்
வரையும் பாதையில்
பேதையாய்ச் சுற்றுகின்றேன்.
தொலைகின்றேன்.

மௌனமே என்
நிகழ்காலம்.

விட்டுவிடுங்கள்.

திரளும் காதலைச்
சொல்ல வக்கற்று
மூட்டையாய் முடிச்சுப்போட்டு
முதுகிலே ஏற்றிக்கொண்டு

பிரசவிக்கும்
ஒவ்வொரு கணத்தையும்
கொன்றுக் குவிக்கின்றேன்.

கொட்டும் மழையாய்
அழுதுத் தீர்க்கின்றேன்.

நான்... ஒரு நத்தை...

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (3-Nov-18, 2:29 am)
பார்வை : 81

மேலே