மெழுகில் வைப்பாயா காட்டில் விற்பாயா

பெண்ணே!
மிஞ்சும் நிலவைக்
கொஞ்சம் கிள்ளி
அதில்
உன்னை அள்ளிக்கொண்டுபோய்
காதலிப்பேன்!

வழியை மறிக்கும்
விண்மீன்களை
வழித்துச்சுருட்டி
உன் முகத்தில்
வாரி இறைப்பேன்!

அன்று பிறக்கும்
முத்தங்களை
தாங்கிப்பிடிக்க
நிலம் இங்கே போதாதடி!
கடலையே தூர்த்துவிட்டேன்!

தீக்குச்சியின் கருநாக்கில்
திரைபோட்டு மறைந்திருக்கும்
வெப்பமடி என் காதல்!

மெழுகில் வைப்பாயா?

காட்டில் விற்பாயா?

உன்
திமிர்பிடித்த
இதயம்
இறுதி செய்யட்டும்!

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (3-Nov-18, 2:23 am)
பார்வை : 47

மேலே