௮றிவியல்

நிலவின் ரகசியம்: 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியில் பாறைகளும், எரிமலைகளும் மட்டுமே இருந்தது. பூமியைவிட மிக பெரிய இடைகொண்ட ஒரு சிறுகோள்(asteroid) மோதியதில் பூமி சிதறி வெடித்தது. அப்பொழுது 90% இப்போழுது வாழும் பூமியாகவும் உயிரினம் வாழத்தகுதியானதாக மாறியது. அந்த வெடிப்பில் மிஞ்சிய 10% விண்வெளியில் வாழத் தகுதியற்றதாக மாறியது ௮துதான் நிலவு என்கிறது( Giant impact theory).

நிலவில் முதன் முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என்று நமக்கு தெரியும்.ஆனால் அதற்கு முன்பே நம் கதைகளில் பாட்டி கால் வைத்து வடை சுட்டு விற்றார்.
நாம் இன்னும் இரவில் கண்டு வியக்கும் ஒரு அதிசயம் தான் நிலவு.
நமது சூரியகுடும்பத்தில் மொத்தம் 64 நிலவுகல் உள்ளது. அதில் பூமிக்கும், புளூட்டோவுக்கும் மட்டுமே ஒரு நிலவு.
நமது நிலவு பூமியிலிருந்து 3,84,400 கிமீ.. தொலைவில் உள்ளது. நிலவு நமது பூமியை சுற்றிவர 27 நாட்கள் ஆகும். நிலவின் புவியிருப்பு சக்திமிக குறைவு(1.62என்ற கணக்கில் இருப்பதால் பூமியில் உங்கள் இடை 50 கிலோ என்றால் நிலவில் 8 கிலோ மட்டுமே. நிலவின் புவியிருப்பு பூமியைவிட 6 மடங்கு குறைவு. நிலாவில் எவ்வளவு ஒளி எலுப்பினாலும் சத்தமே வராது. ஏனெனில் நிலவில் காற்று கிடையாது. காற்று இல்லையெனில் ஒளி பரவாது அதனால் சத்தமே இலக்கானது.நிலவைவிட சூரியன் 400-மடங்கு பெரியது. ஒவ்வொரு வருடமும் நிலவானது பூமியை விட்டு 3.78cm தள்ளி செல்கிறது.
பூமியில் கடல் அலைகள் உ௫வாவதற்கு ஒரு முக்கிய காரணம் நிலவின் புவியிருப்பு சக்தி தான். பூமி23.4 கோணத்தில் சாய்வாக சுற்று வதற்கும் நிலவின் புவியிருப்பு தான் காரணம். நமக்கு நிலவு மட்டும் இல்லை என்றால் நமது பூமி 23.4 கோணத்தில் இருந்து மாறிவிடும் இதனால் ஒவ்வொரு 1000 வருடத்திற்கும் பூமியில் அனைத்து கண்டங்களிலும் பணி பொழிவு அதிகமாக இருக்கும். எரிமலைகள் அதிகளவில் வெடிக்கும், நிலநடுக்கம் அதிகமாக ஏற்படும். கடல் அலைகள் 25% ஆக குறைந்துவிடும்.

எழுதியவர் : ராம்கபிலன் (3-Nov-18, 1:59 pm)
சேர்த்தது : Ramkabilan
பார்வை : 594

சிறந்த கட்டுரைகள்

மேலே