என்றும் அழகு
வெளிநாட்டு வெண் புறவே!
என்னை தினமும் பார்த்தும் பார்க்காமல் செல்லும் உன் அழகிய விழி அழகு!
மயிலின் அழகிய தொகையும் பொறாமை கொள்ளும் உன் கூந்தல் அழகு!
பூமியை தொட்ட மழைத்துளிப் போல் சிரிக்கும் உன் சிரிப்பு அழகு!
பெரும் அலையாய் வரும் சுனாமியையும் மயங்கி விழ வைக்கும் உன் கண்ணத்தின் குழி அழகு!
நான் உன்னை பற்றி வர்ணிப்பதை கேட்டு அமைதியாய் ரசிக்கும் உன் செவி அழகு!
வார்த்தைகள் ஏதும் பேசாமல் மௌனம் காக்கும் உன் அழகிய உதடுகள் அழகு!
உன் உதடுகள் அசைந்து உன்னை காதலிக்கின்றேன் என்று நீ சொன்ன போது உன் வெட்கம் அழகு!
நீ சொன்ன காதல் என் தமிழ் மொழியில் வந்த போது உன் இதயம் அழகு!
உன் இதயத்திற்குள் நுழைந்து நம் காதலை சொல்ல வைத்த என் தாய் மொழி மிக மிக அழகு!