உனைத் தழுவிக் கொண்டோடுது கவிதை அலை
உனைத் தழுவிக் கொண்டோடுது கவிதை அலை
*******************************************************************************
தமிழே உனக்கொரு இனிய கலை -- அதைத்
தழுவிக் கொண்டோடுது கவிதை அலை
அமிழ்தாய் இனித்திடும் உனது சுவை - உனைப்
பழுதின்றி ஆள்வது எனது கலை
பண்ணோடு இசைப்பது உனது அசை -- எனில்
புண்ணின்றிக் காத்திடும் எனது இசை
அரங்கினில் ஏறும் உனது நடை -- அங்கு
கரங்கெனச் சுழலும் ஓசை அலை
சங்கம் கண்டது உனது தளை -- அதில்
அங்கம் வகிப்பது எனது தலை
எம்மொழி சார்ந்து நாடி ருந்தாலும் --நம்
செம்மொ ழிக்கீடுயிணை ஏதுமிலை