அழகே அழகே

வான் அழகு அதில் மீன் அழகு
மதி அழகு அதில் கறையழகு
மாடழகு அதன் திமில் அழகு
நீ அழகு உன் நெற்றியழகு
நாள் அழகு அதற்கு கதிரழகு
நீர் அழகு அதனுள் மீனழகு
கொடையழகு கொடுக்கும் கையழகு
உன் விழியழகு அதன் காட்சியழகு
கரையழகு ஓடும் ஆறழகு
தேனடையழகு அதன் சுவை இனிது
குயில் அழகு அதன் நிறம் அழகு
உன் இல்லம் அழகு உன் உள்ளம் அழகு
உன் அன்னை அழகு பெண்ணே நீ சிறப்பழகு
உனை பண்ணில் வைத்தால் பண்னழகு
பாட்டிற்கு வார்த்தைத் தந்து சீறிப்பாயும் செந்தமிழே சிறப்புப் பெற்ற பேரழகு.

எழுதியவர் : நன்னாடன் (2-Nov-18, 11:50 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : azhage azhage
பார்வை : 263

மேலே