பாபஞ்செய் யாதிரு மனமே 🙏🙏

பாபஞ்செய்யாதிரு மனமே,
பிறர் மீது கோபம் கொள்ளாதிரு மனமே
நீர்மேல் குமிழ்போல் இவ்வாழ்வு
நிமிடம் ஒன்றில் நிகழும் உன்சாவு ..

நந்தவனத்தில் ஒரு ஆண்டி -அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி -மெத்தக்
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி …!!

நல்ல வழி தன்னை தேடு
நித்தம் ஈசனை மனதார நாடு
நல்லவர் கூடத்திற் கூடு -என்றும்
வள்ளலை மனதில் வாழ்த்தி கொண்டாடு..!!

பாபஞ்செய் யாதிரு மனமே .
செய்தால் கோபம் கொண்டு நாளை
நம்மை கொண்டோடிப் போவான் எமனே ..

சொன்ன சொல்படி நில்லு ,
துன்பம் வந்தாலும் நேர்மை வழிப்படிச்செல்லு ,
உயிரே போனாலும் வாய்மையைச் சொல்லு ,
பொல்லாத அகங்காரத்தை சாதித்து கொல்லு…!!

அன்பும் ,பணமும் கெஞ்சிக் கேள்ளாதே -எழில்
பெண் மீது மோகம் என்றும் கொள்ளாதே ,
மனம் சிறிதும் தடுமாறி இச்சைக்குள்ளாகாதே,
சிவன் தந்த வாழ்வை வீணாக்கி மாளாதே,!!

காசிக்கு சென்றால் மட்டும் போகுமோ ?
நாம் செய்த கரும வினை,
கங்கையில் குளித்தால் இங்கு தீருமோ ?-அகத்தாய்வு
இல்லையேல் பாவம் அதைப்போக்க இடம் தான் கிட்டுமோ ??!!

பாபஞ்செய் யாதிரு மனமே .
செய்தால் கோபம் கொண்டு- நாளை
நம்மை கொண்டோடிப் போவான் எமனே ..

பாராட்டுக்கும் ,புகழுக்கும் ஏங்கும் கோலம்
மெய்யில்லாத வாழ்விற்கு ஒரு அனுகூலம்
எல்லாம் பொய்யெண்ண உணர்த்த வருமொருகாலம்
தொண்டு கொண்டு வாழ்வதே இறைவனிடி சேர்க்கும் பாலம்

பாரினில் உயர்ந்தது பத்தி -இதை
உணர்ந்தவர்களுக்கு உடன் கிட்டும் முத்தி
முத்தியில் தொழுதால் ஈசனிடம் உண்டு சித்தி
எல்லாம் சிவமயம் என்றுணர்வதே மெய்ப்புத்தி ..!!

மனிதனை நேசிப்போம்
மனித மனதில் இறைவனை யோசிப்போம்
கருவறையில் உருவாகி
கல்லறையில் குடியேறும்
நிழற் பிம்பம் நாம்
ஆதலால் உள்ளவரை
பாபஞ்செய் யாதிரு மனமே

என்றும் …..என்றென்றும் ….
ஜீவன் 👍👍

எழுதியவர் : ஜீவன்.. (4-Nov-18, 3:24 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 245

மேலே