அவளின் மொழி

மாய எழுதுகோல் கொண்டு
மந்திர மை ஊற்றி
இதயக் கூட்டின்
பக்கவாட்டுச் சுவற்றில்
கொஞ்சம் கொஞ்சமாய்
கிறுக்கிச் சென்ற கோடுகள்
அதன் இஷ்டப்படி
புள்ளி வைத்து
புரியாத பாஷையை
பிரசவித்து பிரச்சாரம் செய்கிறது
இப்பாசையின் பொருள் புரியாமல்
என் அகராதியும் கொஞ்சம்
தடுமாறியும் தடம்மாறியும் செல்கிறது ..
விரைவில் வந்து
உன் கிறுக்கல் மொழியின்
பொருள் விளக்கமும்
கருப்பொருளையும்
விவரிக்க விரைந்து வருவாயா ?
என் தேடலின் தேவதையே ....!