சதுரப்பூக்கள்

சதுரமான பூக்களையும்
பார்த்திருபோமா என்று
நான் யோசிக்கும்போது
என்னில் மிஞ்சி வழிந்ததை
உன் கள்ளர்கள்
அபகரித்தனர் எண்ணியது போல.
கண்களை மூடிக்கொண்டேன்.
காட்சிகள் புலப்பட்டன.
ஒவ்வொவின்றிலும் இருக்கிறது
உப்பு வெடியும் பற்றிய திரியும்.
செவ்வகமாக வட்டமாக
சுழன்ற உன்னையும்
அவை சுழற்றின.
பூமி கடைகின்றது
காற்றையும் நெருப்பையும்,
நீ நாட்கள் என்பாயே...
அதில்தான் வெடிகள்
கமறிக்கமறி வெடித்தன
உன் தலை சுக்கலானதும்
நான் மீண்டும்
சிந்தனைப்பட்டேன் எனில்
அது சதுரப்பூக்கள்
என்பது பற்றியதான...

எழுதியவர் : ஸ்பரிசன் (4-Nov-18, 3:38 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 72

மேலே