தமிழ் மகள்
என்னருகே அவள் வந்தாள்
கைகள் பற்றி
எனைத் தந்தேன் ஏற்றருள
வேண்டுமென்றாள்
வண்ணமலர் எனைத் தொட்ட
போதில் நானும்
வசமிழந்து நிலைமறந்து
சிலை போலானேன்
அன்பொழுகும் மென்முறுவல்
அமுது கூட்டி
அன்றலர்ந்த மலர்தன்னை
மாலை கோத்து
நின்றவளை நானணைக்க
முயன்ற போதில்
கனவறிந்து கலங்கி நின்றேன்
வந்தவள் தமிழ்மகளென்று!!!