தமிழன்னை
உலகத் தமிழரே ! உலகத் தமிழரே!
திரும்பிப் பாரும் !திரும்பிப் பாரும்!
தீந்தமிழ் அமுதின் சுவையை திகட்டாமல்
பருகிப் பாரும் அடிக் கரும்பின்
சாற்றை அறியாதார் உண்டோ வீணில்
தமிழின் தரமறிவாய் தமிழர் உலகே
நடுநிலை பிறழ்ந்த கொடுமதி கொண்டோர்
தமிழினை யறிந்திலர் தமிழனை மதித்திலர்
தொன்மைச் சிறப்புடைய தமிழர் மாய்ந்தனர்
என்னும் மதி மயக்கமோ அதனால்
மதங்கொண்ட களிறு போலத் தமிழர்கள்
மனங்கொண்ட மொழி வாகை கொள்ளவே
பகைவனை பகலவானாய் சுட்டு வீழ்த்தி
வெற்றி பெறவே வேண்டுவன செய்து
எவ்வகை மொழியும் எதிரில்
நில்லாது
எத்திசைவு செல்லினும் அத்திசை
தமிழே
இன்றும் என்றும் இருப்பதும் தமிழே
தமிழின் உயிர்த்தே நம்முயிர் தமிழகம்
அதனால் தமிழ் உயிரென்பதை அறிக
தமிழ்தான் என்றும் தமிழற்கு மொழியே