மறலி

பகுதி 1

யாருமில்லாதப் பாதை!வண்டிகளின் ஓசை கேட்கவில்லை!காற்றில் மரங்கள் அசைவது மட்டும் தெரிந்தது.பறவைகள் அங்குமிங்கும் பறந்துக்கொண்டு தங்களின் இருப்பிடத்தைத் தேடிக்கொண்டிருந்தன.தன்னுடையக் காலனிகளின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு நடந்தவள்,"அருவி" எனத் தன் பெயரை யாரோ அழைத்ததைக் கேட்டுத் திடுக்கிட்டாள்.
திடீரென மின்னல் வெளிச்சம் ஒன்று தோன்றிமறைய, என்னென்றுத் தெரியாமல் பயந்தாள்.விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டுமென நினைத்து ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தாள்.
உள்ளே நுழைந்தவுடன்,"அம்மா! நான் வந்துவிட்டேன்" என்று அலறியவளின் வாய் மூடவில்லை."என்ன ஆச்சர்யமாக இருக்கிறதே!"வெளியில் நமது இல்லம் போல் இருந்தது.உள்ளே வந்தால்!
ஆ!"இங்கு எப்படி ஆறு வந்தது?"கண்ணெட்டும் தூரம்வரை தெரிகிறதே!இது என்ன! ஏதோ ஒன்று துள்ளித் துள்ளிக் குதிக்கிறது?"மான்குட்டி" என்று சொல்லிக்கோண்டே தன் மீன்போன்றக் கண்களை விரித்தாள்.தன் கால்களைச் சுற்றி இருபுரமும் அழகலகாய் பூத்துக்குழுங்கும் "பூக்கள்!"ரீங்காரமிட்டுத் திரியும் "வண்ணத்துப்பூச்சிகள்!"சிந்தையை மயக்கும் வாசனை திரவியம் எங்கும் பரவி இருப்பதைக் கண்டாள்.எப்படி இவை அனைத்தும் இங்கு வந்தது என தெரியாமல் குழம்பிக்கொண்டு நடந்தவள் சட்டென நின்றாள்.
கண்முன்னேத் தெரிந்தக் கண்ணாடியில் தன் தோற்றத்தைக்கண்டு மூச்சையடைத்து நின்றாள்.அவளின் மேனியில் "தேவதைகள்" அனிந்திருக்கும் வெந்நிற ஆடை இருந்தது.தோல்களில் இறக்கை.தலையின் மேல் கீரிடம்!கால்கள் படும் இடத்திலெல்லாம் பூக்கள் மலர்ந்தன.
"எனக்கு என்ன ஆயிற்று!"ஒரு வேலை நான் இறந்துவிட்டேனா?கடவுளே!என்ன சோதனை இது! மனதில் வந்த பல கேள்விகளுக்கு அவள் விடையை கண்டுகொள்ளும் முன்பே மீண்டும் "அருவி" எனத் தன் பெயரை அழைக்கும் சத்தம் கேட்டது.
யாரென அவள் திரும்பிப் பார்க்கும் முன்னரே தன்னை நோக்கி ஓர் நிழல் நெருங்கி வந்ததைக் கண்டாள்.இதயத் துடிப்பு எல்லையைக் கடந்தது.கண்கள் முழுதும் கண்ணீர் துளிகள் நிறைந்துப் பார்வை தெரியாத நிலையில் இருந்தாள்.நிழல் தன்னை நெருங்கி வரவர அவள் விலகி நடநதாள்.
அருவி!"எங்கே செல்கிறாய்?"என்னை அழைத்தது நீ தானே!இப்போது ஓடப்பார்க்கிறாய்?நில் அருவி!திரும்பி என்னை பார்!நிழலும் குரலும் தன்னை நெருங்கி வருவதை கண்டு ஓட ஆரம்பித்தாள் அருவி.
சட்டெனக் கால் தவறிக் கீழே விழுந்தவள் "என்னை விட்டுவிடு! என்னை விட்டுவிடு!நீ நினைக்கும் பெண் நானில்லை!விடு! என்னை விடு!"என்று அலறியவளை யாரோ பிடித்து உலுக்கியதை போல் உணர்ந்து கண்களை திறந்துப் பார்த்தாள்.
அட!மதி கெட்டவளே!தூக்கத்தில் என்னென்னவோ உளறுகிறாயே!என்ன ஆயிற்று உனக்கு!முதலில் தரையிலிருந்து எழுந்து மேத்தையில் அமரென்று அருவியின் அன்னைக் கூறினாள்.
சுய நினைவிற்கு வந்தவள்,சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முன்னேக் கண்ட காட்சிகளை நினைத்துப் பார்த்தாள்."ஆறு!மான்குட்டி!இறக்கை!கீரீடம் எல்லாம் எங்கே?எங்கே போனது?"இந்த நினைவோடுத் தன் பெயரை அழைத்த ஓசையும் கலந்து கொண்டது.தன்னறியாமல் உடபெல்லாம் சிலிர்த்தது.
"என்ன கனவு இது!"நல்ல வேலை.எதுவும் நடக்கவில்லை."உயிருடன் தான் இருக்கிறேன்". அம்மா அழைக்கும் ஓசைக் கேட்டுப் படுக்கையை விட்டு எழுந்து சென்றாள்.அவள் சென்றதும் அவளுக்குப்பின்னே மான்குட்டியின் நிழல் ஒன்று தோன்றி மறைந்தது.

தொடரும்..

எழுதியவர் : இரா.ரேணு ஜெயராஜ் (6-Nov-18, 6:14 pm)
சேர்த்தது : Renuga
பார்வை : 136

மேலே