புத்தி சுவாதீனம்
" எங்க பார்த்தாலும் தம்பி! எப்படி இருக்கீங்க? என்று அன்பு கலந்த மரியாதையோடு பேசுவாரே பாட்டி. அவர் எப்படி செத்தாரு? ",என்று பாட்டியிடம் கேட்டான் சிவா.
" அவன் இரண்டு வருடங்களாக புத்தி சுவாதீனம் இல்லாமல் (பைத்தியமாக) இருந்தான்டா. வீட்டுக்குள்ள விலங்கு போட்டு தான் வைத்திருந்தாங்க. ",என்றாங்க பாட்டி.
" அவர் புத்தி சுவாதீனம் இல்லாமல் ஆனது (பைத்தியமானது) எப்படி? ",என்று பாட்டியிடம் கேட்டான் சிவா.
" பச்சைக் கஞ்சாவைத் தின்னுட்டான். அது அவனை அப்படி ஆக்கிடுச்சு!. ",என்று பாட்டி சொன்னாங்க.
" எந்த நேரமும் கஞ்சாக் குடிக்கும் சாமியார்களின் கால்களில் காணிக்கை வைத்து விழுந்து கூம்பிடும் பைத்தியக்கார உலகம், இவரை மட்டும் பைத்தியம் என்று கால், கைகளில் இரும்பு விலங்கிட்டு வைத்ததாக்கும்! ",என்றான் சிவா.
" அது என்னமோ டா?! வீட்டில் பொண்டாட்டியை தினம் அடிச்சு இருக்கான்.
அதுக்கு அப்புறம் தான் கை கால்களுக்கு விலங்கு போட்டு இருக்காங்க. ",என்றாங்க பாட்டி.
இறந்து போன அந்த ஆள் பெயர் இராமர்.
இராமருக்கு ஒரு அண்ணன் உண்டு.
அவர் பெயர் திருப்பதி.
இராமருக்கு கல்யாணம் ஆகி கிருஷ்ணன், பிரியதர்ஷினி என இரண்டு பிள்ளைகள் உள்ளன.
இராமர் மனைவி பெயர் செல்வி.
அவர்களுடைய குடும்பத்தொழில் விவசாயம் தான்.
சிவாவுக்கு இவர்களை எப்படி தெரியும் என்றால சிவாவும், அந்த குடும்பமும் ஒரே குலத்தெய்வத்தை வணங்கக்கூடியவர்கள்.
அதாவது பங்காளிகள்.
இராமர் சிவாவிடம் பேசும் போது மிக அன்பாக பேசியவர்.
ஆனால் எப்படி?
அவருக்கு உண்மையிலே பைத்தியம் பிடிச்சிருந்ததா?
நடந்தது என்ன? என்பதைப் பற்றி அறிய விரும்பினான்.
தெரிந்தவர்களிடம் விசாரித்த போது, ஒருவர், " இராமருக்கு யாரோ செய்வினை செஞ்சிட்டாங்க. அதான் இப்படி பைத்தியமாக செத்துட்டார். ",என்றும், மற்றொருவர், " இராமரோட அண்ணனே செய்வினை வச்சிருக்கலாம். ",என்றும் கூறினார்கள்.
சிவா பல தரப்பட்ட கருத்துகளையும் செகரித்து வைத்துக் கொண்டான்.
கடைசியாக சிவாவின் கருத்திற்கு வலுசேர்க்கும் விதமாக ஒருவர், " ஒரு மூன்று நான் புளியங்குடியில் நின்றிருந்தேன்.
இராமர் கை, கால் விலங்கிடப்பட்ட நிலையில் அங்கு வந்தார்.
அவரைப் பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல் தெரியவில்லை.
இரும்பு பட்டறைக்கு அழைத்துச் சென்று பூட்டப்பட்டிருந்த அந்த இரும்பு விலங்கை அகற்றி ஊருக்கு போகிற பேருந்தில் டிக்கெட் எடுத்து ஏற்றிவிட்டேன். ",என்று அவர் கூறும் போது அவர் கண்களில் கண்ணீர் வந்தது.
சுதாரித்துக் கொண்ட அவரே சொன்னார், " அவர் வீட்டிற்கு வந்ததும் மறுபடியும் விலங்கு பூட்டி இருக்காங்க. இப்போ அவரே இல்ல. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா அவரை என்னோட அழைத்து சென்றிருப்பேன். ",என்றார்.
சிவாவின் தகவல் சேகரிப்பு முடிந்தது.
அடுத்தபடியாக நடந்தது என்ன என்ற உண்மையை அறிய சிவா தன் தேடலைத் தொடங்கினான்.
நிகழ்வுகளுக்கு பின்னால் உண்மை இருக்கும்.
தொடர்ச்சியான நிகழ்வுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை.
சிவா சேகரித்த தகவல்களில் முக்கிய பார்க்கப்பட வேண்டியவை, பச்சை கஞ்சா தின்றதும், தன் மனைவியை அடித்து கொடூமைப்படுத்தியதும்.
பொதுவாக ஒரு மனிதன் சாதாரண நிலையில் கோபப்படுவது ஒரு கால் மணி நேரம் தாக்குபிடிக்கும்.
அதிலும் கடும் கோபம் என்பது இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க வாய்ப்பில்லை.
அப்படி கோபப்படும் போது மனிதனின் புத்தி மந்தநிலை அடைக்கிறது.
சாதாரணமாக மனிதனின் மனநிலை அடிக்கடி சூழ்நிலைக்கேற்ப மாறக்கூடியது.
அதில் அன்பு, பாசம், விருப்பு, கோபம் போன்ற உணர்வுகள் அந்தச் சூழ்நிலைகளில் ஏற்பட்டு மறையக்கூடியவை.
கோபம், ஆசை, பொறாமை, பழி போன்ற உணர்வுகளுக்கு ஆட்படும் போது குறுகிய கால பைத்தியங்களாக மாறுகிறோம்.
ஆனால், கஞ்சா, ஆல்கஹால் போன்ற போதை பொருட்களை உட்கொள்ளும் முளையோட ஒருநிலை தன்மை அதிகரிக்கப்படுகிறது.
சாலையில் மது அருந்திய ஒருவர் ஏதோ ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டு நெடு நேரம் வசவு மழை பொழிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
போதை இறங்க இறங்க அவர் சகஜ நிலைக்கு வந்துவிடுகிறார்.
மற்றொரு நிகழ்வு சொல்ல வேண்டும் என்றால் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்தல் என்ற நிகழ்வே போதுமானதாக உள்ளது.
மன ஒருநிலைக்காக எப்போதும் பெரும்பாலான சாமியார்கள் கஞ்சா போதையில் இருக்கிறார்கள்.
புருஷ்லீ என்ற நடிகர் கஞ்சாவை பச்சையாக உண்ணும் பழக்கம் உடையவராகவும், அவர் இறந்த போது கூட அவருடைய உடலில் கால் கிலோ கஞ்சா இருந்ததாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததாக செய்தி கூறுகிறது.
தனக்கே உரித்தான பாணியில் புரூஸ்லீ சண்டைக் கலை எல்லோரையும் கவரும் வகையில் இருந்தது.
இதையெல்லாம ஏன் சொல்கிறேன் என்றால் இராமருடைய இறப்பிலும் அவருடைய நடவடிக்கையில் பைத்தியம் என்று கூறப்பட்டதன் மர்மத்தையும் விளக்கும் பொருட்டு தான்.
இராமருக்கு பச்சை கஞ்சா உண்ணும் இருந்தால் அதனால் ஏற்படும் போதையால் இராமரின் சிந்திக்கும் திறன் மழுங்கி தினமும் ஏதோ காரணமாக அமைய அவர் மனைவி அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்.
அதை தடுத்த அப்பா, அம்மா, அண்ணன் என யாரையும் மதிக்காமல் அடித்ததால் பைத்தியக்காரனாயிட்டான் என்று இரு சங்கிலிகளால் விலங்கிட்டாங்க.
இதன் பிறகு கஞ்சா உட்கொள்ள இயலாததால் மன நிலை மேலும் மோசமடைய காரணமாக அமைந்தது.
சாப்பிட உணவு கொண்டு போய் கொடுததால் அதை தூக்கி எறிந்து கொபத்தை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு சரியான சிகிச்சை அளித்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம்.
கஞ்சாவை தொடர்ச்சியாக உட்கொள்வதால் அதனால் ஏற்படும் போதை மனிதன் மூளைப்பகுதியைத் தாக்கி அதன் சுதந்திரத் திறனை பாதிக்கிறது.
அளவுக்கு அதிகமாக கஞ்சாவை உட்கொண்டால் மூளையை அதிகப்படியான போதை தாக்கி மரணத்தை ஏற்படுத்தவும் காரணமாக அமைகிறது.
இதற்கு உதாரணமாக புரூஸ்லீயின் இறப்பை அது குறித்த செயதி அறிக்கையின்படி சான்றாக இங்கு கூறிக் கொள்கிறேன்.
நம் மூளையின் செயல்பாடு மிகவும் சுதந்திரத்தன்மை கொண்டவை.
அதை அதன் வழியே கட்டுபடுத்துதலே யோகப்பயிற்சி.
நன்றிகள்.