தீபாவின் தலைத் தீபாவளி

முன்னுரை
தீபாவளி தினம் கொண்டாடும் காரணத்துக்கு பல இதிகாசக் கதைகள் உருவாகி உள்ளது. ஒரு சிலர் இராமர் இராவணனைக் கொன்ற தினம் என்பர். வேறு சிலர், விஷ்ணுவின் மனைவி சத்தியபாமா நரகாசுரனோடு போர் தொடுத்து அவனைக் அசுரனைக் கொன்ற தினம் என்பர். . அவன் இறந்த நாளை கொண்டாடுவதே தீபாவளி என்கிறார்கள் வட நாட்டவர். இரண்டிலும் வட நாட்டு ஆரிய தொடர்புண்டு. அதனால் வட நாட்டில் அத்தினம் விஷேச தினம் . தேற்கில் தை பொங்கலும் தமிழ் புது வருசமே தமிழர்கள் கொண்டாடும் தினங்கள் .
இராவணன் ஒரு திராவிடன். சிவபக்தன் ஆகவே அவன் இறந்த தினத்தை எவ்வாறு திராவிடர்கள் கொன்ட முடியும் போன்ற வாதங்கள் முன்வைக்கப் பட்டுள்ளது. வாதம் எப்படி இருப்பினும் அத்தினம் தேசீய விடுதலை நாள் . அதனால் குடும்பங்கள் ஓன்று கூடி மகிழும் தினமே தீபாவளி தினம் . வீட்டுக்கு தீபம் ஏற்றி இறைவனை வணங்கும் தினம் அதனால் தீபத்தின் ஓளி தீவாளியாயிற்று இத்தினம் தசரா எனப்படும் சரஸ்வதி பூஜை தினம் வந்து இருபதாம் நாள் வரும் தினமாகும்.)
.இனி நாம் கதைக்கு வருவோம் .

நரகாசுரன் தான் இறக்கும் நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை அணிந்து பின் தீபங்கள் ஏற்றி, இறைவனை வணங்கி, கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் இதிகாசத்தில் . அவன் கேட்டுக் கொண்டது போல் மாதவனும் தீபாவும் தங்களது முதல் தலைத் தீபாவளியைக் கனடாவில் இனத்தவர்கலோடும் நண்பர்களோடு கொண்டாட நினைத்ததில் என்ன தவறு?.

ஒன்டாரியோ கனடாவில் உள்ள டெலஸ் (Telus) தொலை தொடர்பு நிறுவனத்தில் சிரேஷ்ட மார்க்கெட்டிங் மனேஜராக மாதவன் வேலை. மாதம் 10,000 கனேடிய டாலர்களுக்கு மேல் சம்பளம் . சலுகைகள் வேறு. தான் எடுக்கும் சம்பளத்துக்கு ஏற்ப பிறர் மதிக்கும் அளவுக்கு தன் அந்தஸ்தை சமூகத்தில் பிரதிபலிக்க பொருட்களை பாவிக்க வேண்டாமா.? புது பென்ஸ் கார் வைத்திருந்தான். கையில் ஒரு விலையுயர்ந்த ரொலெக்ஸ் கைக்கடிகாரம். கழுத்தில் ஆறு பவுனில் தங்கச் சங்கிகிலி . இரு கை விரல்களிலும் மூன்று மோதிரங்கள், அதில் ஓன்று வைரமோதிரம். தனது விருப்பப்டியே யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பிரபல நகைக் கடை வியாபாரி ராஜேந்திரத்தின் ஒரே மகள் தீபாவை மணம் முடித்தான்.

கனடா மாப்பிள்ளை, அதுவும் கை நிறையச் சம்பளம். சொந்தத்தில் தனி வீடு. வீட்டுக்குப் பின்னால் நீச்சல் குளமும், அழகிய தோட்டமும். அதை கவனிக்க ஒரு தோட்டக்காரன். பெறுமதி கூடிய உயர் வர்கத்தினர் வாழும் “பே வியூ ” ( Bay View) வீதி ரிச்மெண்ட் ஹில்லில் நான்கு அறைகள் உள்ள புதிதாகக் கட்டப் பட்ட வீடு. அதன் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் டொலர்களைக் கிட்டும் சுற்றுபுறம் முழுவதும் சீனர்களும், யூத்ரகளும் வெள்ளை இனத்தவர்களும் . அவன் குடுமபம் மட்டுமே ஈழத் தமிழர் குடும்பம். தீபாவின் தாய் மாமன் இந்திரன் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜன்ட்,. மாதவனின் அண்ணன் கண்ணன் ஓரு டாக்டர் இவர்களும் ரிச்மண்ட் ஹில்லில் வசித்தனர்
தீபாவின் உடல் அமைப்பு ஓரூ மொடலை போன்றது. "32-26-32"
புள்ளிவிவரங்களைக் கொண்டது. நிறை 60 கிலோ, உயரம் ஐந்தடி ஒன்பது அங்குலம். மாதவனும் ஒரு மொடலைப் போன்ற தோற்றம் உள்ளவன். தனது நிறை கூடாமலும் குறையாமலும் இருக்க, ஜிம்முக்குப் போய் பாதுகாத்துக் கொண்டான். நல்ல சோடிப் பொருத்தம் என்று அவனின் நண்பர்கள் விமர்சிப்பதை கேட்டு பெருமைப் பட்டான் .

மாதவன் கனடாவுக்கு வரமுன் மது அருந்துவது கிடையாது ஆனால் ஆடு கோழி, மீன் போன்ற அசைவ உணவுகள் மேல் அவனுக்குத் தனிப் பிரியம். அதுவும் கனடாவுக்கு போன பின் மாடு, பன்றி இறச்சிகளையும் அவன் சாப்பிடத் தொடங்கினான். தனக்கு வரும் மனைவி அழகியாக மட்டுமல்ல நன்றாக வாயுக்கு ருசியாகச் சமைக்கத் தெரிந்தவளாக இருக்க வேண்டும். ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும் அதோடு மடுமல்லாமல் தான் விரும்பிய ஆடை அணிய வேண்டும். தன் நண்பர்களோடு சிரித்துப் பேசப் பழக வேண்டும். அவனின் நிபந்தனைக்கு ஏற்றவாறு யாழ்ப்பாணம் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்ற அறிவியல் பட்டதாரி தீபா ஒரு வருடத்துக்கு முன் மாதவனின் மனைவியானாள். மாதவனின் வருமானமும் அவனின் சொத்து அடிப்படையில் வெகு விரைவில் தீபாவுக்கு விசா கிடைத்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தாள்.

அவளுக்கு கனடா கலாச்சாரம் புதிது. சில தமிழ் பெண்கள் சேலை அணிவது இல்லை என்பதைக் கண்டாள். அதோடு அவளோடு பல்கலைகழகத்தில் படித்த சினேகிதி வசந்தி திருமணமாகி கனடாவுக்கு இரு வருடங்ககளுக்கு முன் வந்தவள் அவளில் ஏற்பட்ட மாற்றத்தை தீபாவால் நம்ப முடியவில்லை. . அவளைபோல் தீபாவையும் ஈழத்து கலாசாரத்தில் இருந்து மாறி தீபா அணிந்திருந்த சேலையில் இருந்து ஜீன்சுக்கோ (Jeans) அல்லது அரை பாவாடை சட்டைக்கு ( Skirts & Blouse) மாறும்படி மாதவன் கேட்டும் அவள் மறுத்து விட்டாள். நான் ஒரு ஈழத் தமிழிச்சி. புலம் பெயர்ந்ததால் நான் என் தமிழ் கலாக்சாரத்தில் இருந்து என்னால் மாற முடியாது என்று மறுத்து விட்டாள். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது தன் நீண்ட பின்னிய தலை முடிக்கு மல்லிகைப் பூ வைத்து கோவிலுக்கு போவது அவள் வழக்கம,. அதை கனடாவிலும் தொடரவே அவள் விரும்பினாள். அதனால் கணவனோடு அவளுக்கு பிரச்சனை ஏற்பட்டது தீபாவின் நீண்ட தலைமுடியை கட்டையாகக் கத்தரித்து, உதடுக்கு லிப்ஸ்டிக் பூசி சில தமிழ் கனேடிய பெண்கள் போல் தோற்றமளிக்கும் படி மாதவன் கேட்டதுக்கும் அவள்மறுத்து விட்டாள். வெள்ளிகிழமையில் சைவ உணவையே சமைத்தாள் யாழ்ப்பாணம் .நல்லூர் திருவிழா காலத்தில் அவள் வீட்டில் சைவம் சமைத்தாள். அக்காலத்தில் மாதவன் அனேகமாக வெளியில் அசைவ மதிய போசனம் உண்பான் .
***
அன்று மாதவன் தீபா தம்பதிகளின் தலைத் தீபாவளி. அவர்கள் தீபாவின் வீட்டிலிருந்து புத்தாடைகள் மகளுக்கும் மருமகனுக்கும் கூரியரில் வந்திருந்தது.
தீபா சற்று அனுசாரம் பார்ப்பவள். ஒவ்வொரு வெள்ளிகிழமையும் கோவிலுக்கு மாதவனோடு போய் வருவாள்
நவராத்திரிக்கு கொலு வைத்து ஒன்பது நாட்களும் தீபா விரதம் இருந்தது . மாதவனுக்கு பிடிக்கவில்லை. அந்த ஒன்பது நாட்களும் அவன். உண்டது வெளியில் உள்ள உணவகத்தில் அசைவ உணவு.

தங்கள் தலைத் தீபாவளியை சிறப்பாக தங்கள் வீட்டில் நண்பர்களோடும் இனத்தவர்களோடும் கொண்டாட இருவரும் தீர்மானித்தார்கள்
அதிகாலை எழும்பி தீபா குளித்து, பூசை செய்து, பெற்றோர் அனுப்பிய காஞ்சிபுரம் சேலை உடுத்து கையில் கோப்பியோடு ஹாலில் பேப்பர் வாசித்துக் கொண்டிருந்த மாதவனிடம் வந்தாள். அவன் நைட் கவுனோடு இருப்பதைக் கண்டு
” என்ன டார்லிங் இன்னும் குளித்து என் அப்பாவும் அம்மாவும் கூரியரில் அனுப்பிய பட்டு வேஷ்டியும் சட்டையும் அணியவில்லயா? இதோ அவரகள் அனுப்பிய காஞ்சிபுரம் சேலை உடுத்து வந்திருக்கிறேன். கெதியிலை போய் குளித்து ஆடையை மாற்றிக்கொண்டு வாருங்கள் . இருவரும் முதலில் கோவிலுக்கு பொய் வருவம் . அதன் பின் உங்கள் அண்ணாவிடமும் என் மாமாவிடமும் ஆசீர்வாதம் வாங்குவோம். அவர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு குடும்பத்தோடு வரப் போகிறர்கள் . உங்கள் டைரக்டர் மைக்கலும் அவர் மனவி மிச்சேலும் வருவார்களா ?”
“நிச்சயம் வருவார்கள். அவர்களுக்கு இது எங்கள் தளலை தீபாவளி என்று நான் சொன்னேன் “
மாதவன் தீபாவை மேலும் கீழுமாக ஒரு கண்ணோட்டம் விட்டபின் “மாமாவும் மாமியும் அனுப்பிய இந்த சிகப்புக் காஞ்சீபுரம் உனக்கு பொருத்தமாகத் தான் இருக்கு. எங்கை உன் அம்மா தந்த வைரத் தோட்டைக் காணோம். விருந்தினர்கள் வீட்டுக்கு வரும்போது வைரத் தோடு நகை எல்லாம் போட்டுகொண்டு இரும்”:
“அதெல்லாம் சமையல் முடிந்த பின் போடுறன் விருந்தினர் பதின்ரண்டு மணிக்குத் தானே வருவினம் . நீங்கள் முதலில் போய் குளியுங்கள்”தீபா சொன்னாள்
“அதுசரி இண்டைக்கு என்ன சமையல். நான் பாகிஸ்தானியன் கடையில் நல்ல ஆட்டு இறச்சி, ஈரலோடும், கொழுப்போடும் நேற்று வாங்கி வந்து பிரிட்ஜ்யில் வைத்தனான். அதிலை பால் பொரியலும் குழம்பும் எலும்பு போட்டு சொதியும் . முட்டைஅவித்து வையும் . மீனும் இராலும் பொரித்து வைக்க மறக்காதையும் . என் டைரெக்டர் மிக்கேலும் அவர் மனைவியும் விரும்பி சாப்பிடுவார்கள் ”

“எப்பவும் உங்களுக்கு அசைவ சாப்பாடு எண்ணம் தான். இண்டைக்கு ஒரு புனித தினம் தசரா நடந்து இருபதாம் நாள், அதனாலை தீபாவளிதினமான இன்று வீட்டில் சைவ உணவு தான் சாப்பாடு” என்றாள் தீபா.

“அப்ப நான் வெளியிலை இருந்து மட்டன் பிரியாணியும் இறைச்சி கறியும் வங்கி வாரன்: எனக்கு நல்லாய் நினைருக்கு ஊரிலை தீபாவளிக்கு கிடாய் வெட்டி சமைப்பதுண்டு அது மட்டுமல்லாமல் அன்றுசாராயமும் குடித்துபோட் கும்மாலம் அடிப்பார்கள் . வரும் விருந்தின்றக்ளுக்கு குடிக்க ஷிவாஸ் ரீகல் விஸ்கியும் வங்கி கொண்டு வந்து வச்சிருக்கிறன் . என் டைரெக்டர், அதோடு உம் மாமாவும் என் அண்ணரும் குடிப்பார்கள் “
“எப்பவும் உங்கள் பேச்சில் விஸ்கியும் . அசைவ உணவும் தான். இன்று மட்டும் அவை வேண்டாம் அத்தான் : என்று பணிவுடன் கணவனுக்குச் சொல்லிப் போட்டு அங்கு நிற்காமல் தீபா அறைகுள் போய் விட்டாள்.
“தீபாவின் பதில் மாதவனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. முதல் நாள் பாகிஸ்தானியன் கடையில் தீபாவளிக்க்காக வாங்கி வந்து பிரிட்ஜ்க்குள் தான் வைத்த ஆட்டு இறைச்சியின் கதி என்ன என்று சிந்தித்தபடியே கோப்பியை குடித்துவிட்டு குளியல் அறைக்கு துவாயோடு மாதவன் போனான். குளித்து விட்டு திரும்பியோது தீபா போனில் அவளின் தாயோடு பேசியது அவன் காதில் விழுந்தது.
“என்ன தீபா யாரோடை போனிலை கதை”: தனக்குத் அவள் பேசியது கேட்காத மாதிரி மாதவன் அவளைக் கேட்டான்
“ அம்மாவும் அப்பாவும் வட்சப்பினல் ( Whatapp) போன் செய்தவர்கள் . அவர்கள் உங்களோடு பேச வேண்டுமாம்:

மாதவன், தீபாவின் தந்தை ராஜேந்திரனோடு பேசினான்,
“தம்பி உமக்கும் தீபாவுக்கும் எங்களது எங்களின் உங்களது தலை தீபாவளி வாழ்த்துக்கள். இன்று ஒரு புனித தினம். எனக்கு நினைவு இருக்கு நான் திருமணமான புதிதில் எனக்கும் என் மபைகும் தீபாவளியன்று இறைச்சி சமைக்காததுக்கு எனக்கும் என் மனைவிக்கும் வீட்டில் சண்டை நான் குடித்துப் போடு கோபத்தில் சோற்று பானையை சோற்றோடு வீசி முற்றத்தில் எறிந்தேன் . அது நடந்து ஒரு கிழமைக்கு உம் மாமி கோபத்தில் வீட்டில் சமைக்கவிலை, என்னோடு பேசவில்லை .. அன்று முதல் நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன் உமது மாமி சமைப்பதை பேசாமல் சாப்பிடுவன் .அதுபோல ஓரூ சம்பவம் உங்கள் தலை தீபாவளிகயன்று நடந்து விடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் இருவரினதும் வருங்காலத்துக்கு நல்லது . அதுவும் இன்று தீபாவளியன்று . விருந்தினர்கள் வரமுன் கோவிலுக்கு பொய் வாருங்கள். உங்கள் இருவருக்கும் திரும்பவும் எங்கள் வாழ்த்துக்கள்”
என்று ராஜேந்திரன் வாழ்த்தினார்
“ உங்கள் இருவரினதும் தலைத் தீபாவளி பரிசுகளுக்கும் நன்றி மாமா. மாமியை நான் கேட்டதாகச் சொலுங்கள் எனக் கூறி போனை வைத்தான். தீபா மாதவனை பார்த்து அம்மாவும் அப்பாவும் என்னவாம்”?
“என்ன, செய்வதையும் செய்து விட்டு தெரியாத மாதிரி கேட்கிறீர் . உமது இஷ்டப்படி சமையும் என்று அவளின் பதிலை எதிர்பார்க்காமல் மாதவன் தன அறைக்குள் போனான்.
****

பதின்ரெண்டு மணிக்கு விருந்தினரககள் வீட்ட்டில் நிறம்பி விட்டார்கள். மாதவன் தனது போஸ் மைக்கலோடு பேசும் பொது ’மைக்கல் ஐ ஆம் சாரி இன்று சாப்பாடு வெஜிடேரியன் . நோ ட்ரிங்கஸ். இன்னொரு நாள் உங்கள் இருவரையும் அழைத்து தீபாவை கொண்டு மட்டன் கறி செய்வித்து தாறன் சாப்பிட்டுப் பாருங்கள்” என்றான் மாதவன்.
அதற்கு மைக்கல் சொன்ன பதில் மாதவனை அதிர வைத்தது.
“சொரி மாதவன் நானும் மிச்கேலும் வெஜிடரியன் அதோடு நாங்கள் இருவரும் மது அருந்துவதில்லை . என் மனைவி மிச்செல் ஒரு சாய் பாபா பக்தை”,,

****
(யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (7-Nov-18, 7:07 pm)
பார்வை : 266

மேலே