கவிதை ஹைகூ

•
பரணில் எடுத்த
குடை பிடித்தும் நனைகிறேன்
எலிப்புழுக்கை மணம்
•
பல்லிளிக்கும் ஒப்பந்தங்கள்
இனிப்புடன் கைமாறிய காசோலைகள்
வாய்பிளந்த வடிகால்கள்
•
வீட்டார் பார்வையில்
விரசாய் நடக்குது மகப்பேறு
செல்லப் பிராணி
•
அதிகாலைப் பொழுது
கதை பேசியவாறே நடக்கிறார்கள்
உடல் நலம்
•
பிச்சையிடாதே பரப்புரை
பாவங்களை தொலைப்பது எப்படி
விழிக்கும் பயணிகள்
•