புகைப்படம்
இறந்த காலத்தின் காகித பிரதிகள்...
கரையும் மணித்துளிகளில் நகல்கள்...
கண்கள் எழுதும் கலர் கவிதைகள் ...
வார்த்தைகளால் விவரிக்கமுடியாத தருணங்களின்
காட்சித் தொகுப்பு ....
வையத்தோடு விழிகள் கொண்ட காதலின் சின்னம்....
உறைந்த காலம் சொல்லும்
மௌன சிறுகதைகள்....
எதிர்காலத்திற்காக சேகரிக்கப்பட்ட
நிகழ்கால வண்ணத் துகள்கள்...
புகைப்படம்!!