பொறுப்பு

என்
நேசச்சித்திரவதைக்கு
நீயே பொறுப்பு

என்
தீராத காதலுக்கும்
நீயே பொறுப்பு

என்
பார்வை படும்
அனைத்திலும் நீயாக
இருப்பதற்கும்
நீயே பொறுப்பு

என்
சிந்தையில் எந்த நேரமும்
உனையே நினைப்பதற்கும்
நீயே பொறுப்பு

என்
ஒரு கவளச் சோறு
தொன்டைக்குழி தான்டையில்
வரும் விக்கலுக்கும்
நீயே பொறுப்பு

எழுதியவர் : புவி (9-Nov-18, 2:44 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : poruppu
பார்வை : 211

மேலே