ஓய்வின் நகைச்சுவை 45 60 -60 ஆசிர்வாதம்

மகள்: அம்மா என் கண்ணையே ஒப்படைக்கிறேன் பத்திரமா பார்த்துக்கோ
மகன்: (மெதுவாக) அம்மா பிரிஎண்ட்ஸோட போறேன் 2 நாட் தேடாதிங்கோ
மாமனார்: ஒண்ணுமே தெரியாம இவ்வளவு நாள் வளர்த்திட்டே. ஒரே நாள் எல்லாம் கத்துக்கொடுக்காதே சீக்கிரம் புரிஞ்சிப்பான்
மாமியார்: இவ்வளுவு நாள் வாங்கினதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நறுக்குன்னு திருப்பிக் கொடுப்பேன்னு தெரியும். ஒரேயடியா கொடுத்துடாதே. எம்பிள்ளை தாங்கமாட்டான்
அம்மா : இந்த வயசு ரெம்ப பொல்லாத வயசடி. எதுக்கும் இவர் பெயரிலே ஏதாவது நெட்லே வருதா பார்த்துக்கோ. அவர் மொபைல் ஞாபகம்….
தோழி: (கண்ணை சிமிட்டி) ஹனிமூன் எப்போடி?
இவள்: நாளை……… இவரை கேட்டல் இப்பபோவே கிளம்பிடுவார்