இதயத்தில் அவள்

எழுதிய காதல் இதயத்தில்
வழுவாத வரிகளாய் எழுத்துக்களில்
மெழுகு போல் உருகும் எண்ணங்களில்
ஓயாது காதல் ஒளி வீசுகிறது

எவருக்கும் தெரியாத இவ்வெழுத்துக்கள்
என் இதயத்தில் கவிதையென
கலகலப்பாய் பூத்திருக்கு
அவள் வருவாள் என சொல்லி சிரிக்கிறது

அவளும் என் இதய சிறையில்
அன்பு எனும் எழுத்துக்களால்
கவிதையென அடைபட்டு கிடக்கின்றாள்
வருவேன் வருவேன் நான் என்று ,

இதயத்தில் பொறிக்கப்பட்ட இக்காதல்
காதலா/ காவியமா /அழியாத சின்னமா/

எழுதியவர் : பாத்திமாமலர் (10-Nov-18, 2:06 pm)
Tanglish : ithayathil aval
பார்வை : 686
மேலே